பக்கம்:வாடா மல்லி.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 315


மேகலை நீலிமாவிடம் கேட்டாள்.

“அம்மா எங்க...”

“அம்மா இங்க வரலியா. நான் எங்கெல்லாமோ தேடிட்டு இங்க வாறேன்.”

மேகலை அழுவாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அவளோ பித்துப் பிடித்து அந்த சர்தாரிணிப் பெண், இவள் போனபோது எப்படிக் கிடந்து எப்படி முழித்தாளோ, அப்படிக் கிடந்து, அவள் போலவே கண்கள் சொருக, வாய் துடிக்க, அந்தத் தரையிலேயே சரிந்தாள்.

37

கிங்காதேவியை நான்கைந்துபேர் கைத்தாங்கலாக நடத்தி வந்தார்கள். அவர்களில் இரண்டுபேர் சராசரி மனிதர்கள். அவர்களின் தோளில் கைபோட்டபடி அவர்களையே ஊன்றுகோலாகப் பயன்படுத்திக்கொண்டு, நொண்டியடித்து வந்த அம்மாவைப் பார்த்ததும் மேகலை துடித்துப் போய்விட்டாள். அவள் முகத்தில் சிராய்ப்புகள். கால் பாதங்களில் ரத்தம் தோய்ந்த சதைச் செதில்கள். முட்டிக்கைகள் வீங்கிப் போயிருந்தன. தலைமுடி அலங்கோலமாகக் கிடந்தது.

மேகலை அப்படியே எழுந்து அம்மாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, எம்மா... எம்மா’ என்று போட்ட கூச்சலில், லட்சுமி, நீலிமா, குஞ்சம்மா உட்பட அனைவருமே ஓடி வந்துவிட்டார்கள். கங்காதேவி, அவளைப் பார்த்து மெல்லச் சிரித்து அவளை மார்போடு அனைத்துக்கொண்டாள். இதுவே ஒரு உந்து சக்தியாக, மேகலை ஒப்பாரி போலவே ஒலமிட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/337&oldid=1250897" இலிருந்து மீள்விக்கப்பட்டது