பக்கம்:வாடா மல்லி.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 சு. சமுத்திரம்


“எம்மா நான் துரதிர்ஷ்டம் பிடிச்ச பொண்ணும்மா. அக்காமேல உயிரையே வெச்சிருந்தேன். அவள் கல்யாணம் நின்னு போச்சு. பச்சையம்மா மேல பாசம் வச்சேன். அவள் போலீசுல படாதபாடு பட்டாள். நீங்களும் என்ன எப்போ தத்து எடுத்தீங்களோ அப்பவே இப்படி ஆயிட்டீங்க. நான்

இங்க இருக்கப்படாதும்மா... போயிடுறேன்... போயிடுறேன்.”

முண்டியடித்த மேகலையை நீலிமாவும்

குஞ்சம்மாவும் பிடித்துக்கொண்டபேது, கங்காதேவி மேகலையை பெருமிதமாகப் பார்த்து, அவள் தலையைக் கோதிவிட்டபடியே பேசினாள்.

“என்ன மேகல். இப்படிப் பேசுற. நீ மட்டும் எனக்குக் கிடைக்காட்டால், நான் உயிரோட திரும்பியிருக்க மாட்டேன். அன்னை இந்திராவைப் பார்க்கவந்த கூட்டநெரிசல்லருந்து மீளாமல், என்ன நானே சாகடிச்சிருப்பேன். என்னைப் பெறாமல் பெத்த தாய் போயிட்டாலும் நான் பெறாமல் பெத்த மகள் கிடைச்சுட்டாள்னு என்னை நானே ஆறுதல் படுத்துறேன். நீ மட்டும் போயிட்டால், நான் மட்டும் இங்க இருப்பனா. ஒரு வேளை உனக்கு என்கூட இருக்க இஷ்டம் இல்லியா.” மேகலை இருக்கிறது என்பதுபோல் லேசாய் தலையை ஆட்டியபோது, நீலிமா, அந்தத் தலையைப் பிடித்து மேலும் கீழுமாய் பலமாய் ஆட்டிவிட்டாள். கங்காதேவி, எல்லோரையும் ஒரு பறவைப் பார்வையாய் பார்த்துவிட்டு லேசாய் சிரித்தபடியே சொன்னாள்.

“இந்த ரெண்டு நாளுலயே, என் மகளையும் உங்களையும் பார்க்காமல், என்னால இருக்க முடியல. செத்துப்போனால் எப்படித்தான் இருப்பேனோ...”

மேகலை, அப்படிப் பேசக்கூடாது என்பதுபோல் அம்மாவின் வாயைப் பொத்தினாள். பிறகு அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/338&oldid=1250899" இலிருந்து மீள்விக்கப்பட்டது