பக்கம்:வாடா மல்லி.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 317


பாதங்களைப் பார்த்துவிட்டு மீண்டும் அழப் போனாள். கங்கா தேவி அவள் கண்களைத் துடைத்துவிட்ட படியே பேசினாள்.

“நீ அழுகுறதுக்காக பிறக்கலடி, மகளே. நீ வாழ வைக்க வந்தவள். ஒரு அப்பாவி சர்தார்ஜிய நீ காப்பாத்துன விதத்தைக் கேள்விப்பட்டேன் மகளே. இதுக்காக நான் ரொம்ப ரொம்ப பெருமைப்படறேன். மகளே. அந்த சர்தார்ஜி எங்க இருக்கார்? சரிசரி இருக்கட்டும், வெளில வரவேண்டாம்னு சொல்லுங்க. பேய் கொண்ட ஜனங்கள். வேலி பயிரை மேயுது. பயிறு நஞ்சை துப்புது... கவலைப்படாத என் மகளே! நீ முழுசா பக்குவப்படுறது வரைக்கும், இந்த அம்மாவுக்குக் கல்லைத் துாக்கிப் போட்டாலும் சாவு வராது. ஏண்டி உங்களத்தான், என்னையும் என் பொண்ணையும், கொஞ்சநேரம் தனியா

இருக்க விடுறீங்களா..”

கூட்டம், மெல்ல மெல்ல கரைந்தது. வெந்நீர் வெச்சு ஒத்தடம் போடட்டுமா...’ என்று கேட்ட லட்சுமியையும், கங்காதேவி கண்களால் போகச் சொல்லிவிட்டாள். பிறகு மேகலையின் தோளைப் பற்றியபடியே கட்டிலில் உட்கார்ந்தாள். மேகலை கீழே இருந்தபடியே அவளை அண்ணாந்து பார்த்தாள். ஒருவரின் அருகாமை, இன்னொருவருக்கு சுகம் கொடுத்திருக்க வேண்டும். பேச்சற்ற பெரும் சுகத்தில், ஒருவரையொருவர் ஈர்த்தபடியே இருந்தார்கள். பிறகு கங்காதேவி வழியெங்கும் தான் கண்ட கோரக் காட்சிகளை, மனிதர் உயிரை மனிதர் பறித்த கொடுரக் காட்சிகளை விவரித்தாள்.

“எதிரும் புதிருமா வருகிற ரெண்டு நாய்கள்ல ஒரு நாய் கடிக்கப் போகுதுன்னு வச்சுக்கோ, அப்போ.. எதிர்ல வருகிற நாய் பதிலுக்குக் குலைக்காம வாலை பின்னங்கால்களுக்குள்ள சொருகிக்கிட்டா, கடிக்கப் போற

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/339&oldid=1250900" இலிருந்து மீள்விக்கப்பட்டது