பக்கம்:வாடா மல்லி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சு. சமுத்திரம்


சொன்னான். மீண்டும் அழுதான். அந்த மனிதர், பிடி தளர, அவனைப் பார்த்தார். அவன் பார்த்த பார்வையில், அடித்தவனைத் தவிர, அத்தனைப் பயணிகளுக்கும் ஒரு அனுதாபம் ஏற்பட்டது. அந்தப் பெண்கூடத் தனது அழுகையை அடக்கிக்கொண்டு, அவனை அனுதாபமாகப் பரர்த்தாள். சிலர் சத்தம் போட்டே பேசினார்கள். அவனைப் பார்த்தால் குற்றவாளியாக இருக்க முடியாது என்று ஒரு கட்சி. ஏதோ ஒரு மாதிரி என்று ஒரு கட்சி. எல்லோருமே பேருந்து சீக்கிரம் போக வேண்டுமே என்ற ஒரே கட்சி. ஆகையால், அவனை ஒரு பிரச்னையாகப் பார்த்தார்கள். அந்த நடுத்தர மனிதர் அவன் மேல் போட்ட பிடியை எடுத்துவிட்டு, அவனைக் கண்ணுங் கருத்துமாகப் பாாததாா.

அவனோ, எவரையும் பார்க்காமல், தன்னைத்தானே உள்நோக்கிப் பார்ப்பதுபோல் நின்றான். பிடரி வரை நீண்ட முடி. காதுகளில் பாதியை மூடி அவற்றை உருமாற்றிக் காட்டிய கேசம். புதர்போல் மண்டிய உச்சி. நீளவாக்கில் போகாமலும், உருண்டு திரளாமலும் அவை இரண்டும் கலந்த முகம். செம்மண் நிறம். சிமெண்ட் நிற பாண்ட். அதற்குள் சொருகப்பட்டாலும், வெளியே இடுப்புச் சதையைக் காட்டும் நீலச்சட்டை பதினெட்டு வயதைக் காட்டும் உடல், உச்சி முதல் பாதம்வரை ஒரு குழைவு. விகிதாச்சாரத்திற்கு சற்று அதிகமான பிட்டம். பால் வடியும் முகம். ஆனால் அது கள்ளிப் பாலோ என்று சந்தேகிக்கும் அளவிற்கான மாறாட்டம். சில சில்லறைக் குறைகளுடன் கூடிய அழகுப் பையன்தான். அவன் அழுவது, அழகே அழுவது போலிருந்தது. இப்போது அடித்தவன்கூடப் பேசாமலிருந்தான். ஆனால், அங்கு மிங்குமாய்க் கிடந்த சில தனிக்கட்டைகள் ஆஜராயின.

“போலீஸ் ஸ்டேஷன் இதோ வரப்போகுது. இவன ஒப்படைச்சிட்டு போயிடலாம்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/34&oldid=1248854" இலிருந்து மீள்விக்கப்பட்டது