பக்கம்:வாடா மல்லி.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 319


போபால், அலிகள் போய்விட்டார்கள். மத்தியானம் கணக்கோடு வருவதாக சொல்லிவிட்டு, அந்த இடத்தை விட்டு அகன்றனர். இதற்குள் மேகலை, அம்மாவின் காயங்களை தனது கைக்குட்டையால் துடைத்துவிட்டாள். பிறகு “உங்களமாதிரி பெரிய மனசு உள்ளவங்களையும் கடவுள் இப்படி படச்சிட்டாரே” என்று தாபத்தோடு சொன்னாள். கங்காதேவி அவள் கைகளை எடுத்துத் தன தோளில் போட்டுக்கொண்டே உபன்யாசம் செய்வது போல ஒப்பித்தாள்.

‘மேகல்... உடம்புல ஊனம் உள்ளவர்களுக்கு இயற்கை நஷ்ட ஈடா ஒரு அசாத்திய சக்திய கொடுக்குது. ஹெலன் ஹெல்லரே இதுக்கு ஒரு உதாரணம். பைபிளில் கூட ஒரு வாசகம் உண்டு... தேவகுமாரன் U}& பாவங்களைச் சுமந்ததுமாதிரி, அவர் வழியில் மானுடத்தின் பாவங்களைச் சுமக்கக் கடவுள் திடமான, நம்பிக்கைக்குரிய மனிதர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு சிலுவையைச் சுமக்கச் சொல்லிக் கொடுக்கிறாராம். இது பொய்யா இருந்தாலும், இதுலயும் ஒரு உண்மை இருக்கு முடம், செவிடு, குருடு போன்ற ஊனம் கடவுள் கொடுத்த சிலுவை என்றால், முழுக்க முழுக்க அலித்தன்மை கொண்ட நாம் சுமக்கிற சிலுவை ஏசுநாதர் சுமந்ததைவிடப் பெரிய சிலுவை, பிறக்கும்பேதே மரித்து அந்த மரிப்பிலிருந்து எழுந்தவர்கள் நாம். அதனால நம்மள பற்றி நாமே இரக்கப்பட வேண்டாம்!”

“உங்களால எப்படியம்மா இப்படிப் பேச முடியுது..?”

“யாரையும் வியந்து பார்க்காதே! நான் இப்படிப் பேசுறது நீ நினைக்கிறதுமாதிரி பெரிசல்ல. நம் முன்னோர்கள், நமக்காக எழுதி வைச்சிருக்கிற புத்தகங்களைப் படித்தால். அறிவு தானாய் பெருகும். பட்டறிவை அதில் கலந்தால், அதுவே போகப் போக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/341&oldid=1250902" இலிருந்து மீள்விக்கப்பட்டது