பக்கம்:வாடா மல்லி.pdf/342

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 சு. சமுத்திரம்


ஞானம் ஆகும். எனக்கு நீ ஒரு உதவி செய்யணும். இன்னைக்கும் நாளைக்குமான உதவி அல்ல. என் வாழ்நாள் வரைக்குமான உதவி.”

“அதுக்குத்தானம்மா நான் இருக்கேன்.” “தினமும் காலையில் ஒரு மணி நேரம். மாலையில் ஒரு மணி நேரம் நான் சொல்ற புத்தகங்களை நீ படிச்சுக் காட்டனும் செய்வியா..?”

“எங்க ஊருல ஒரு பழமொழிம்மா. கரும்பு தின்ன கூலியான்னு.”

“அப்படிச் சொல்லு என் ராசாத்தி. காலைல இந்த சமூகத்தை தராசில் நிறுத்த கார்ல்மார்க்சோட சிந்தனைய எளிய முறையில் விளக்கும் கட்டுரைகளைப் படிச்சுக் காட்டனும், மாலையில் பகவத்கீதை, இல்லன்னா பைபிள். இப்படி என்னோட ஆயுள் பரியந்தம் வரைக்கும் நீ படிச்சுக் காட்டனும்.”

“இப்பவே ஆரம்பிக்கலாமா அம்மா.”

“வேண்டாம்மா. முதல்ல அந்த சர்தார்ஜிய போய் பார்ப்போம். ஆயிரம் புத்தகப் படிப்பைவிட ஒரு மனிதாபிமானம் உயர்ந்தது. இதை நான் புத்தகத்திலதான் படிச்சேன். ஆனால் நீயோ அதைச் செயலில் காட்டிட்டே இந்த வீட்டுக்கு இனிமேல் நீ இளவரசி அல்ல, அசல் மகாராணி! இனிமேல் நான் நிம்மதியா சாவேன்.”

“கடைசியில சொன்ன வார்த்த இனிமேல், உங்க வாயில இருந்து வரக்கூடாதும்மா.”

“யார் சொன்னது? ஒரு தாய் பால் குடிக்கும் குழந்தையை ஒரு மார்பகத்திலிருந்து இன்னொரு மார்பகத்திற்கு மாற்றும்போது உள்ள இடைவெளிதான் மரணமுன்னு டாகூர் சொன்னார். மரண பயத்தை விடுகிறவர்களிடம்தான், வாழ்க்கை சிநேகிதமாய் சிரிக்கும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/342&oldid=1250903" இலிருந்து மீள்விக்கப்பட்டது