பக்கம்:வாடா மல்லி.pdf/343

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 321


மேகலை, கங்காதேவியை ஆகாயமும் பூமியுமாய் ஆனவள் போல் பார்த்தாள். ஆணென்றோ, பெண்ணென்றோ, அலியென்றோ கூறமுடியாத ஒரு அருள்வடிவாய் கண்டான்.

38

காலம் ஒன்பது ஆண்டுகளாக ஓடிப்போய் சுயம்புவை முழுக்க முழுக்க மேகலையாக்கிவிட்டது.

அந்த ஆலமரம் அப்படியேதான் இருந்தது. ஆனால், முர்கேவாலி மாதாவுக்கு அந்த மரத்தடி ஒண்டிக் குடித்தனம் தேவையில்லாமல் போய்விட்டது. தன்னந் தனியாய் தனிக்குடித்தனம் நடத்துகிறாள். அவர்களைப் போலவே, அந்த மரத்திற்கு அருகேயே, கூம்புமாதிரியான பெரிய கோவில். கால் வைக்கக் கூசும்படியான பளிங்குக் கற்கள். ஒரு சுற்று பெரிய தளம். அப்போது புகைப்படமாக இருந்த முர்கேவாலி மாதா, இப்போது, சலவைக்கல் சிலையாக மாறிவிட்டாள். அந்தச் சிலைக்கு முன்னால், கிருஷ்ணன் படம். பின்பக்கச் சுவரில் கங்காதேவியின் சடாமுடிப்படம்.

மேகலை, தேவிக்குக் கற்பூரம் ஏற்றி, கண்மூடித் தியானித்துவிட்டு, பழைய ஆலமரத்தடிக்கே வந்தாள். இப்போது அந்தக் கோவில், அலிகளுக்கு மட்டுமல்லாது, அனைவருக்கும் பொதுக்கோவிலாகி விட்டது. இவள்தான், கோவிலை நிர்வகிக்கிறாள்; என்றாலும் ஆட்கள் அதிகமாகும்போது, ஆலமரத்தடிக்கு வந்துவிடுவாள். அதோடு, கோயிலுக்குள்ளே அலிகளின் நல்லது கெட்டதுகளை வைத்துக்கொள்ள விரும்பவில்லை. காலையிலும், மாலையிலும் இந்த ஆலமரத்தடியே ஒரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/343&oldid=1250904" இலிருந்து மீள்விக்கப்பட்டது