பக்கம்:வாடா மல்லி.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 சு. சமுத்திரம்


தியானத் திண்ணையாகவும் தீர்வுத் திடலாகவும் மாறிவிட்டது. நீலிமாவுக்கு முன்பல் ஒன்று தானாய் விழுந்து விட்டதால், இப்போது பாடுவதை விட்டுவிட்டு, டோலக்கை மட்டும்தான் அடிக்கிறாள். அவள் உடம்பில் ஒரு தொய்வு. லட்சுமி முகத்தில் தேமல்கள் மாதிரியான வயதுத் தடங்கள். குஞ்சம்மாவுக்கு அதில் சந்தோஷம். அவளுக்கு இன்னும் சுருக்கங்கள் வரவில்லை. ஆனாலும், உடம்பு முழுவதும் கொஞ்சம் சுருங்கிப்போய்தான் இருந்தது. மேகலைக்குத்தான் பிராய வயதின் மறுபுற T6))6).

அந்தத் தோழிக் காய்கள் லோசாய்ப் பழுக்கப்போன போது, அந்த மேகலைப் பிஞ்சு இப்போது நல்ல காயாகி விட்டது. கடிக்கும்போதே இனிப்பது மாதிரியான ஒருவித துவர்ப்புக் கலந்த இனிப்பைத் தருமே கொய்யாக்காய் அது மாதிரி முகம். சிறிது லேசாய் கரடு முரடு, பழைய குழைவு இப்போது கம்பீரமாய்த் தெரிந்தது. பழைய சொங்கிப் பார்வை, இப்போது சொக்கும் பார்வையானது.

மேகலைக்குப் பின்பக்கம், நீலிமாவும், நலிமாவும் நின்று கொண்டிருந்தார்கள். மார்க்கரெட் அவள் பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். லட்சுமியும், குஞ்சம்மாவும் அங்கே வந்துகொண்டிருந்தார்கள். பேர் என்னமோ தனித்தனி வீடுகள். ஆனால், இவர்கள் பெரும்பாலும் ‘கிச்சன் காபி னெட் மாதிரி, மேகலை வீட்டில்தான் இருப்பார்கள்.

மேகலை, தன்னைப் பார்ப்பதற்காக அங்குமிங்குமாய் கூடிக்கூடிப் பேசியபடியே நின்றவர்களைப் பார்த்தாள். தாயும் மகளுமாய் தனித்திருந்தவர்கள் கண்ணில் பட்டார்கள்.

“எக்கா! ஏன் அங்கேயே நிற்கீங்க. வாங்கக்கா...”

ஒரு காலத்தில் இறுக்கிக் கட்டிய கயிறுபோல் தோன்றிய சுலோச்சனா, இப்போது தொப்பையாய் சரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/344&oldid=1250905" இலிருந்து மீள்விக்கப்பட்டது