பக்கம்:வாடா மல்லி.pdf/345

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 323


நின்றாள். அவள் வயிறு பெருமளவில் முன்னுக்கும் முதுகு சிறுமளவில் பின்னுக்குமாய் தடம் விலகி நின்றன. ஆனாலும் அவள் முகத்தில் குறுஞ் சிரிப்பு. வழக்கம்போல் கண்களைத் தாழ்த்தி தாழ்த்திப் பார்க்கும் மாதக் கடைசிப் பார்வையல்ல. மகளின் தோளில் கைபோட்டு மந்தகாசமாய்ச் சிரிக்கும் அழகுப் பார்வை. மேகலை அந்தச் சிறுவனையே உற்றுப் பார்த்தாள். அறிவு ஜீவிகள் போடும் குர்தா - ஜிப்பா ஜோரான நிறம்.

“என் மருமகன் ரொம்பத்தான் வளர்ந்துவிட்டான்.”

“என்ன ஆண்டி : லாஸ்ட் வீக் பாத்தீங்க... அதுக்குள்ளயா வளர்ந்துடப் போறேன்!”

“பொண்ணு வளர்த்தியும் பீர்க்கங்காய் வளர்த்தியும் ஒண்ணுடா. இப்போ ஆம்புள வளர்த்தியும். அப்படியா ஆகிட்டு.”

“மம்மி! வாட் ஆண்டி சேய்ஸ்”

“இப்படித்தான் ஏதாவது புரியாட்டா இங்கிலீஷ் காரனா மாறிடுவான் சுயம்பு.”

“இவனைப் பார்க்கும்போதெல்லாம், நான் ஒன் வீட்டுக்கு ரெண்டாவது தடவையா வந்தததும், இவனுக்கு கஸ்துாரி மாத்திரை வாங்கிக் கொடுத்ததும் நேத்து நடந்ததுமாதிரியே இருக்குதுக்கா. ஆனால், போன மாசம் இவனுக்குக் கொடுத்தது மாதிரி கஸ்தூரி மாத்திரைய ஒரு குழந்தைக்குக் கொடுக்கச் சொன்னேன். வெட்டு கூடிச்சே தவிர குறையல. இப்போ கஸ்தூரி மாத்திரயிலயும் கலப்படம்.”

சுலோச்சனா ஏறிட்டுப் பார்த்தாள். இளந்துறவி மாதிரி வெளிர் மஞ்சள் சேலை. பிடி தளராத உடம்பு. பார்வையிலேயே ரெண்டு வித பாவம். ஒன்று பிறத்தியார் பாவத்தைப் போக்குவது போன்ற பார்வை. இன்னொன்று,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/345&oldid=1250906" இலிருந்து மீள்விக்கப்பட்டது