பக்கம்:வாடா மல்லி.pdf/348

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326 சு. சமுத்திரம்


தூங்கும்போதே போய்விட்டது. ஆனால், அந்த அதிர்ச்சி, இன்னும் போனபாடில்லை.

சுயம்பு, மீண்டும் மேகலையாகி கங்காதேவி படத்தைக் கையெடுத்துக் கும்பிட்டாள். கடந்த ஓராண்டு காலத்தில் இவன் இப்படி அடிக்கடி கும்பிடுவதால் அவள் தோழிகளுக்கு அது ஆச்சரியத்தைக் கொடுக்கவில்லை. ஆனாலும் அங்கே நின்ற தாய் அலிக்கு நேரமாவது போலிருந்தது. எங்கேயோ புறப்படப்போன மகளை இழுத்துப் போட்டுக் கொண்டே இருமினாள். மேகலைக்கு உணர்வு வந்தது. அதட்டினாள்.

“ஏண்டி அம்மா அடித்தா நீயும் திருப்பி அடிக்கனுமா...”

“அம்மாகூட பாட்டுப்பாட வாறேனேன். பஞ்சாபி பயலுவ விசிலடிக்கான். வீட்டுக்குள்ளய இரு என்கிறான். வீட்டுக்குள்ள இருக்கவா நாம பிறந்திருக்கோம்.”

“பேசாமல் ரெண்டுபேரும் ஒரு சடங்கு வச்சு சுவிகாரத்தை ரத்து செய்யுறீங்களா!”

கிழவி, மேகலை கண்டிப்பதைப் பார்த்துவிட்டு, சரி என்றாள். உடனே சின்னவள் அழுதாள். மாட்டேன், மாட்டேன்’ என்று தலையை ஆட்டினாள். அம்மாவை அங்கேயே அடிக்கப்போனாள். பிறகு குரு அலியான மேகலையைப் பார்த்து, நாக்கைக் கடித்தாள். மேகலை தீர்ப்பளித்தாள்.

“அம்மா அடிக்கலாம், மகள் அடிக்கப்படாது என்கிற அலிகள் சம்பிரதாயத்தை பிடிச்சுக்கிட்டு இருக்கக்கூடாது. எல்லாம் ஒரு சொல்லுல அடங்கணும். கோழி மிதிச்சு குஞ்சு சாகாதுன்னா, குஞ்சு மிதிச்சு கோழி சாகுமா பெரியம்மா... ஏண்டி, இனிமேல் அம்மாவ அடிக்கிற வேலைய வச்சுக்கிட்டால், அப்புறம் நடக்கற சங்கதி வேற."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/348&oldid=1250909" இலிருந்து மீள்விக்கப்பட்டது