பக்கம்:வாடா மல்லி.pdf/350

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 சு. சமுத்திரம்


நாமும் மனித சீவராசிகள்தான். நம்மாலயும் சொந்தக் கால்ல நிக்க முடியும்.”

“எப்படி பழைய சம்பிரதாயத்தை.” “ஏசு கிறிஸ்துவ சிலுவையில் அறைஞ்ச கோலத்த காட்டுறதையே, இப்போ அப்படி காட்டப்படாதுன்னு கிறிஸ்தவர்கள் மத்தியிலேயே ஒரு கருத்து நிலவுது. எதையும், சோகத்துல முடிக்காமல், ஏசுநாதர் சிலுவையில் இருந்து பீறிட்டு உயிர்த்தெழுந்ததாய் காட்டணும்னு மேல் நாடுகளில் இளம் பாதிரிமார்கள் வாதாடி வாறாங்க. எதுக்கும் யோசிச்சுப் பாருங்க... எங்கம்மா கங்காதேவி இருந்தாலும் இதைத்தான் சொல்லியிருப்பாங்க.”

மேகலையிடம், வாதிடப்போன அந்தக் கிழட்டு அலிகள், அவள் கை கழுவுவதுபோல் கண்களும் தங்களைக் கழுவிக்கொள்வதைப் பார்த்துவிட்டார்கள். யோசிக்க வேண்டிய விவகாரம். செருப்படி பட வேண்டியது, அலிகளை நையாண்டி செய்கிறவர்கள்தான்.

அந்த மூவரையும் வழியனுப்ப மேகலை வாசலுக்கு வந்தபோது, ஒரு படகுக் கார் வந்தது. மேகலை புரிந்து கொண்டாள்.

“பிதாஜி. பிதாஜி” அந்த சர்தார்ஜி காலில் கைபோட்டவளைத் தூக்கி நிறுத்தி, ஆரத் தழுவினார்.

“கானா காதியா பிதாஜி.” “நை பேட்டி. இப்பதான் சாப்பிட்டேன்” என் வீட்டுக்கு நீ வந்து ஆறு மாசம் ஆகுது. வேலை தினமும் இருக்கும் மகளே. நாம்தான் அதிலிருந்து ஒரு நாளைக்காவது விலகணும்.”

“எங்க பிதாஜி முடியுது? வெட்ட வெளியாய் இருக்கிற இந்த இடத்துல அலிகளுக்காக ஒரு தர்மஸ்தலா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/350&oldid=1250911" இலிருந்து மீள்விக்கப்பட்டது