பக்கம்:வாடா மல்லி.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330 சு. சமுத்திரம்


தலைமுறைக்குப் போதும். இதுக்குமேல எதுக்கு? என்று சொன்னபடியே ஆலமரத்தடியில் உட்கார்ந்தாள். இந்தப் பேச்சை மட்டும் அவள் தோழிகள் காதில் வாங்க மறுத்தனர்.

இதற்குள், இன்னொரு கூட்டம் எந்தக் கலப்பும் இல்லாத அவர்களின் கூட்டம்.

“விவேக்புரியில் ஒரு ஆபீஸர்மேல பஸ் மோதி இறந்துட்டாரு...”

“சரி, கூடமாடப் போய் அழுங்க, காசு கொடுத்தால் வாங்கப்படாது.”

“நம்ம ஏரியாவுக்குள்ள மோசினி குரு அலி, சேலா அலிகளை அனுப்பி வைக்கான். நேற்று கொஞ்சம் கலகலப்பு...”

“அதெல்லாம் கூடாது. இன்னிக்கு மட்டும் அந்த ஏரியாப் பக்கம் போகாதீங்க. மோசினிகிட்ட நான் பேசுறேன்.”

‘இவள் மூணு தடவை ஆள மாத்திட்டாள். முதலாவது ஆள் அழுகிறான். ரெண்டாவது ஆள் பொருமுறான்.”

வாசலில் நின்ற லட்சுமி புகார் செய்தவளைக் கண்டித்தாள்.

“ஏண்டி, குதிரைக் கொண்டை, தராதரம் தெரியாமல் இதைப்போய் அவள்கிட்ட சொல்றயடி. இவள் மூணாவது ஆம்பளையாவது மாற்றாமல் இருக்கச் சொல்லு.”

மேகலை மீண்டும் எழுந்தாள். அதற்குள் ஒரு கார். எந்த நல்ல காரியத்திற்கும் அவளிடம் விபூதி குங்குமம் வாங்கிக்கொண்டு போகும் கார், பத்தாண்டுகளுக்குமுன்பு ஒரு நூறுரூபாய் கொடுத்ததே, அந்தக் காரின் வாரிசுக் கார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/352&oldid=1251083" இலிருந்து மீள்விக்கப்பட்டது