பக்கம்:வாடா மல்லி.pdf/353

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 331


லட்சுமி, வாசலில் தன்னை ஒருமாதிரிப் பார்ப்பதை புரிந்துகொண்ட மேகலை, உதட்டைக் கடித்தபடியே வீட்டுக்குள் வந்தாள். நீலிமா, நளிமா, மார்கரெட், குஞ்சம்மா, பகுச்சார்தேவி எல்லோரும் லட்சுமியைப் பார்த்து கண்ணைச் சிமிட்டினாள்கள். மேகலை கேட்டாள்.

“என்னக்கா வேணும்.”

“சித்ராபெளர்ணமி நெருங்குது. கூவாகம் போகணும். நம்ம புருஷன நாம பாத்தாகனுமே.”

“நான், என்ன போகவேண்டாம்னா சொல்லப் போறேன்!”

“நீ வரணும். இவளுக எல்லாம் இந்த வருஷம் நீ இல்லாமல் கூவாகம் போகக்கூடாதுன்னு சொல்றாளுக. ஏண்டி, என்ன பேசவிட்டுட்டு நீங்க சும்மா நின்னா எப்படி..?”

“விழுப்புரம் பக்கத்துல இருக்கிற கூவாகம்தானே. நான் வரமாட்டேன். தமிழ் பேப்பர்ல - பத்திரிகைகள்ல வந்த செய்திகளைப் படித்தால், வாந்தி வருது. அலிகளை அசல் தாசிகளா எழுதுறாங்க. நாம் பிறப்பெடுத்ததே அதுக்குத்தான் என்கிறது மாதிரி, பக்கம் பக்கமா எழுதறாங்க. ஆம்பளைங்களைத் தவிர, நமக்கு வேற சிந்தனையே இல்லை என்கிற மாதிரி எழுத்து. இதனாலேயே விழுப்புரம் பக்கத்துல இருந்து விடலப் பயலுக, கூவாகத்துக்கு பஸ் பஸ்ஸா போறாங்களாம். அது கூவாகம் இல்ல, கூவம். இந்தச் சித்ரா பெளர்ணமிக்கு நான் வழக்கம்போல குஜராத்ல இருக்கிற முர்கே மாதா கோயிலுக்குப் போறேன். என்கட நீங்க வேணுமுன்னா வாங்க. ஆனால் நீங்க கூவாகம் போகக்கூடாதுன்னு நான் சொல்லல.”

லட்சுமி, வாயைத் திறந்து வைத்து யோசித்தாள். அப்படி அவள் வாயைத் திறந்தால், சிந்தனை பிறக்காது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/353&oldid=1251084" இலிருந்து மீள்விக்கப்பட்டது