பக்கம்:வாடா மல்லி.pdf/354

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332 சு. சமுத்திரம்


என்று எண்ணியது போல், குஞ்சம்மா அவளின் இரண்டு மோவாப் பிரிவுகளையும் ஒன்றுபடுத்தினாள். அவள் நினைத்ததுபோலவே லட்சுமிக்கு ஒரு சிந்தனை பிறந்தது.

“கூவாகத்துல மட்டும்தான் கூத்தாண்டவருக்கு கோயில் இருக்கதா. நினைக்காதடி. பாண்டிச்சேரியில், பிள்ளையார்குப்பத்துல அரவான் இருக்கார், கடலூருக்கு இரண்டு கிலோமீட்டர் தூரத்துல கடற்கரையோரமாய் மஞ்சக்குப்பம் என்கிற இடத்துல நம்ம புருஷன் இருக்கார். இந்த இடம் அருமையான இடம். கூவாகம் மாதிரி அசிங்கம் கிடையாது. பிள்ளையார்குப்பம் மாதிரி வெடிவிபத்துக் கிடையாது. நம்மளுல இருக்குற மேனாமினுக்கிங்க வராத இடம். நான் ஒரு தடவை போயிருக்கேன். இந்தத் தடவை நீ மாட்டேன்னாலும், நான், அனுமார் ராமலட்சுமணரைத் தூக்கிட்டுப் போனதுமாதிரி ஒன்னை தூக்கிட்டுப் போயிடுவேன்.”

மேகலை, மீண்டும் சுயம்புவானான்.

“கடலூர் படித்த ஊருக்குப் பக்கத்திலுள்ள நகர். ஒரு வேளை டேவிட் அங்கே டாக்டரா இருக்கலாம். அந்த ஆம்பளப் பசங்ககூட கண்ணுல படலாம். வீட்டுக்குப் போகக்கூடாதுதான். ஆனாலும், தெரிஞ்சவங்க கிடைச்சா குடும்ப நிலமையை தெரிஞ்சுக்கலாம். போகலாமா, வேண்டாமா? இருக்கிற நிம்மதியை எதுக்காகக் கெடுக்கணும்.”

39

சிடத்தாண்டவர் கோயிலுக்கு, முன்னாலும் பின்னாலும், சராசரி மனிதர்களுக்குக் கூத்தாகிப் போனவர்களின் கூட்டமயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/354&oldid=1251085" இலிருந்து மீள்விக்கப்பட்டது