பக்கம்:வாடா மல்லி.pdf/357

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 335


செய்தபோது, சேலாக்கள் கார்க்காரிகளைப் பார்ப்பதில் ஜமாத் தலைவிக்கு சிறிது எரிச்சல். ஆனாலும், தன்னை அறியாமலே எழுந்து நீலிமா பக்கம் போனாள். ஏதோ பேசினாள். உடனே அவள் - இடுப்பில் கைதட்டி, “மேகலை மே போலோ” என்று அவளைச் சுட்டிக் காட்டினாள்.

ஜமாத் தலைவியான சுந்தரம்மா, தனது குண்டுச்சட்டி உடம்பை ஆட்டியபடியே கேட்டாள்.

“அப் கிதர் ஹை..”

“தமிழிலேயே பேசுங்க. நானும் தமிழ் நாட்டுக்காரிதான். படித்ததும் பக்கத்துலதான்.”

மேகலை மேற்கொண்டும் பேசாமல் அப்படியே நின்றாள். சுந்தரம்மாவும் புரிந்துகொண்டாள். ஒவ்வொரு நெஞ்சுக்குள்ளும் ஒவ்வொரு சோகம். அதை இடம் பொருள் ஏவல் தெரியாமல் கொட்ட முடியாது. அவள், நீலிமாவின் கையையும் மேகலையின் கையையும் ஒரு சேரப் பிடித்துக் கூட்டிப் போனாள். கீழே காய்ந்து கிடந்த மரத்தைக் காட்டி உட்காரச் சொன்னாள். பிறகு அது அவர்களுக்குச் சரிப்படாது என்பதுபோல் ‘பக்கியடிக்காத ஒரு பாறாங்கல்லைக் காட்டினாள். அவர்களோ தரையிலேயே உட்கார்ந்தார்கள். குஞ்சம்மாவிடம் எதையோ காரசாரமாக விவாதித்துக் கொண்டிருந்த லட்சுமி அங்கே ஓடிவந்து மோவாயை இடித்து இடித்துச்

சொன்னாள்.

“நாங்களும் பார்த்தாலும் பாத்தோம்மா. இப்படி ஒரு நிலமைய பார்க்கலம்மா. கடலூர்ல ஈயடிக்கிற பயல்கூட லாட்ஜ்ல ரூம் கிடையாதுன்னு நக்கலாய் சொல்றான். ரூம் இல்லன்னா இல்லேன்னு சொல்ல வேண்டியதுதானே. அதுக்கு ஏன் நக்கல், இளிப்பு, எளக்காரம். எங்க டெல்லியாயிருந்தால், பீஸ் பீஸா கவாப்’ செய்திருப்போம். இல்லன்னா ஜோடு பிஞ்சிருக்கும்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/357&oldid=1251088" இலிருந்து மீள்விக்கப்பட்டது