பக்கம்:வாடா மல்லி.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 சு. சமுத்திரம்


ஒரு மோகன முகக்காரி சலிப்போடு பதிலளித்தாள். “நீங்க வேற. அப்படியே ரூம் கிடைச்சாலும், நடு ராத்திரியில போலீஸ்காரன் வந்து கதவத் தட்டுவான். கஞ்சா எவ்வளவு வச்சிருக்கேன்னு கன்னத்தில அறைவான். மதுரையில நான் பட்டபாடு.”

மேகலை, ஜமாத் தலைவியின் பக்கமாய் நெருங்கிப் போய் உட்கார்ந்துகொண்டாள். எதிரில் யாரோ ஒருத்தன் லுங்கியும் பனியனுமாய், பிட்டத்தைக் குலுக்கிக் கொண்டே அன்னநடை போட்டான். சந்தேகம் கேட்டாள்.

“நம்ம இனம் மாதிரி தெரியுது. ஆனால் நம்மையும் கண்டுக்காமல் சேலயும் கட்டிக்காமலே திரியுது.”

“அது எனக்குத் தெருஞ்சவள்தான். சொந்த வீட்லய இருக்காள்: அங்கங்க சமையல் வேலைக்குப் போயிட்டு அண்ணன் வீட்டுக்கு போயிடும். குடும்பத்துலயும், யாரும் கட்டுப்படுத்தல. இது மாதிரி படிதாண்டா பத்தினிமாதிரியும் இருக்காளுக. காய்கறி வித்துப் பிழைக்கிறாளுக. இந்தக் கடலூர்ல கூட ஒருத்தன் அஞ்சு நாள் சைக்கிள் விட்டான். அந்த அஞ்சு நாளும் ஆடிப்பாடுறதுக்கு நம்மள மாதிரி ஜீவன்கள் வந்தாளுங்க. ஆனாலும், ஒன்னை மாதிரி என்ன மாதிரி, வீட்ட விட்டு தொரத்தப்பட்டு அலங்கோலமா ஆனவங்கதான் மெஜாரிட்டி. நீ என்ன நினைக்கே...”

மேகலை, குடும்பத்தை நினைத்தாள். மணியார்டர் பணம் திரும்பி வந்ததையும் நினைத்தாள். என்னையும் வீட்டோடு வைத்திருந்தால், எப்படி இருந்திருக்கும். இயல்பான அவளது உள்ளத்தின் இளக்கம் திரவ நிலையிலிருந்து, திடப் பொருளானது. தனக்குள்ளேயே ஏதேதோ முனங்கிக்கொண்டாள்.

இதற்குள், லட்சுமி, ஒன்றைத் தேடிப் பிடித்துச் செல்லம் செல்லமாய்ப் பேசிக்கொண்டிருந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/358&oldid=1251089" இலிருந்து மீள்விக்கப்பட்டது