பக்கம்:வாடா மல்லி.pdf/359

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 337


குஞ்சம்மாவுக்கு, ஒரு மலையாள அலி கிடைத்தாள். மார்க்ரெட்டும் பகுச்சார்தேவியும், இன்னும் கடல் பக்கமிருந்து திரும்பவில்லை. நீலிமா பெங்காலியில் உரத்துக் கத்தினாள். அப்படியாவது எந்த வங்காளிக்காரியும் தன்னை அடையாளம் கண்டுகொள்ளட்டும் என்பது போல். பிறகு தனது தோல்வியை வெற்றியாக்கும் வகையில் சிறிது தொலைவில் பாட்டுப் பாடிக்கொண்டிருந்த மொழியறியாப் பெண்களுடன் விழியால் பேசினாள். அப்புறம் டோலக்கின் டொக் டொக். அவர்களின் டக்.

- . i

எல்லோருடைய கவனமும் மேகலையை விட்டு விட்டுப் புதுக்கதாநாயகியான நீலிமாவின் ரொட்டி மாவு முகம் நோக்கிப் போனபோது, அவளைவிட இன்னொன்று அதிகமாகக் கவர்ந்தது.

அரவான் சாமியின் மரத்தலை வைக்கப்பட்ட கோயில் தேர், மேள தாளத்துடனும், வாணவேடிக்கை யுடனும் வந்துகொண்டிருந்தது. இங்கிருந்த அலிகளைப் போல் பல மடங்கு அலிக்கூட்டம், தேருக்கு முன்னாலும் பின்னாலும் ஆடிப்பாடி வந்தனர். கரகாட்டம், காவடியாட்டம், பிரேக் டான்ஸ். நீலிமா பக்கத்திலிருந் தவள்களை விட்டு விட்டு அந்தக் கூட்டத்தோடு சேர்ந்து டோலக்கைத் தட்ட விட்டாள்.

இதற்குள், அரவான் என்றும் அழைக்கப்படும் கூத்தாண்டவரின் தேர் கோவிலுக்கு எதிரே வந்தபோது, உள்ளூர் மேளம் விலகி, செட்டு மேளம் அதிர்ந்தது. நாதஸ்வரம் உச்சத்திற்குப் போனது. கற்பூர ஒளி வட்டத்தோடு கீழே இறக்கப்பட்ட அரவான் தலைக்குத் தயாராய் வைக்கப்பட்ட மரக்கால்கள், மரக்கைகள் உட்பட அத்தனை உறுப்புக்களும் பொருத்தப்பட்டன. அவருக்கு மடிசார் வேட்டியும், மஞ்சள் கலர் சட்டையும் உடுத்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/359&oldid=1251090" இலிருந்து மீள்விக்கப்பட்டது