பக்கம்:வாடா மல்லி.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2

சுயம்பு, கத்திக் கத்திக் களைத்துப் போனான். அப்பா வையும், அம்மாவையும், திட்டித் திட்டி அலுத்துப் போனான்.

அந்தப் பெட்டிமேல் அவலத்தின் அவலமாக உட்கார்ந்திருந்தான். சவுக்குத் தோப்பில் ஊளையிட்டுக் கொண்டிருந்த நரிகள், அவன் இதுவரை கத்திய கத்தலை சக்தி வாய்ந்த ஒரு மிருகத்தின் கர்ஜனையாக நினைத்து அங்கு மிங்குமாய்ச் சிதறின. ஆனால் இப்போது அவன் தலையில் கைவைத்து, தானே தானாய், தன்னந்தனியாய் உட்கார்ந்திருப்பதை உணர்ந்து, கால் கிலோ மீட்டர் தொலைவு வரை நெருங்கி அவனைப் பார்த்து அரைவட்டம் போட்டன. ஆனாலும் அவன் அவ்வப் போது கத்தினான். ‘அம்மா என்ற கத்தல் அப்பா என்ற அலறல். வார்த்தைகளை வரவழைத்தும், வந்தவற்றை வெளியே துப்புவதுபோலவும் அவன் கத்தியபோது பின் வாங்கும் நரிகள், அவன் அமைதியாகும்போது நெருங்கப் பார்த்தன. பொதுவாக ஆள் அமைதியாகும்போது நெருங்கப் பார்த்தன. பொதுவாக ஆள் வாடைக்கே பயப்படும் அந்த நரிகள், அவனையும், ஒரு ஆறு மாதக் குழந்தையாக இளக்காரமாய்ப் பார்த்தன. எக்காளமாய் ஊளையிட்டன. என்றாலும் சுயம்பு இப்போது அந்தப் பெட்டி மேலே படுத்து கால்களைத் தரையில் போட்டுப் போட்டுக் குதிக்கவிட்டபோது, அந்த நரிகளுக்கு ஒரு பெரும் அச்சம். எதிர்த்திசையில் ஓடின.

இதற்குள், அந்தக் கொடுர இருளை இரண்டாய்க் கீறுவதுபோல், ஒரு லாரி ஒளிக்கற்றைகளோடு அங்கே வந்து லேசாய் நொண்டியடித்தது. சுயம்பு தன்னைத் தானே குறுக்கிக்கொண்டு ஈன முனங்கலாய் முனங்கியதைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/36&oldid=630458" இலிருந்து மீள்விக்கப்பட்டது