பக்கம்:வாடா மல்லி.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 சு. சமுத்திரம்


“சரி, இதுக்குமேல என்ன நடக்கும்?”

“எல்லாருக்கும் தாலி கட்டுன பிறகு கூத்தாண்டவர் புறப்படுவார். நாமும் நம்ம புருஷன் பின்னால ஆடிப் பாடணும். அப்புறம் அவரை காளிக்கு பலி கொடுப்பாங்க. நாம் தாலியறுக்கணும். இவ்வளவும் முடிய நாளைக்கு பகல் பன்னிரண்டு மணி ஆயிடும். நீ இப்பத்தான் மொதல் தடவை வாறியா?”

“ஆமாம்.”

“அரவான் சாமி கதை தெரியுமா?”

“ஒரு காரியம் செய்யலாமா? காரு ரெடியா இருக்குது. கடலூர ஒரு சுற்றுச் சுற்றிட்டு சிதம்பரத்துக்கும் போயிட்டு வந்துடுவோமா.”

“நாம் போறதுக்குள்ள கோயிலை மூடிடுவாங்களே!”

கோயில மூடலாம். ஆனால், கோபுரத்தை மூட முடியுமா? எட்டி நின்று பார்த்துட்டால், அதுவே எனக்கு பெரிசு.”

40

மேகலையும் சுந்தரம்மாவும் காரைத் தேடிப் போனார்கள். ஒரே ஒரு கார்தான். கண்டுபிடிப்பதில் சிரமமில்லை. சுந்தரம்மா, தன்னுடைய சேலா அலிகளைக் கண்டுக்காமல் போனாள். தரையில் கால் பாவாமல் நடந்தாள். மேகலை, அங்கே கூடிய தனது கோஷ்டிக்கு தாலி கட்டிக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு, காரில் ஏறிக் கொண்டாள். ஜமாத் தலைவியையும் ஏற்றிக்கொண்டாள்.

கடலூருக்குள் கார் பஜார் பஜாராய்ச் சுற்றியது. அவள் கண்கள் ஒவ்வொரு டாக்டர் போர்டாய் பார்த்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/362&oldid=1251093" இலிருந்து மீள்விக்கப்பட்டது