பக்கம்:வாடா மல்லி.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 15


பார்த்த டிரைவர் ஆக்ஸிலேட்டரை அழுத்தினார். அவர் அனுமானப்படி, அவன் சரியான ஆக்ஸிடெண்ட் கேஸ். எந்த வண்டியோ அடித்துவிட்டுப் போய்விட்டது. எடுத்துப் போட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தால் அப்போது பார்த்து போலீஸ் வரும். இதனால்தானே நடு ராத்திரியில் துள்ளத் துடிக்க ரோட்டில் கிடக்கும் மனிதர்கள் மீதும் வண்டிகள் ஏறிக்கொண்டே ஓடுது. லாரி டிரைவர் தன்னைத்தானே மெச்சிக்கொண்டார். அவன்மேல் லாரியை விடாமல், வண்டியை ஒடித்து ஒட்டியதே, தான் செய்த மிகப் பெரிய சேவை என்பதுபோல், அந்த வாகனத்திற்குள் உட்கார்ந்த படியே ஒடி, பிறகு தலை மறைவானார்.

அந்த லாரியின் ஒளிக்கற்றைகளாலோ, அல்லது அது போட்ட தகர டப்பா சத்தத்தாலோ, சுயம்பு எழுந்தான். கால்களை மாற்றி மாற்றி, தரையில் மிதித்தான். அம்மாவை நேருக்கு நேராய்ப் பார்த்து இரண்டு திட்டுத் திட்ட வேண்டும் போலிருந்தது. தட்டிக் கேட்க அப்பா வந்தால், அவரையும் ஒரு கை பார்த்துவிட வேண்டும் என்ற கோபம். கடும்கோபம்.

சுயம்பு, பெட்டியை எடுத்து வலது தோளில் போட்டுக் கொண்டான். அவலத்தை ஆத்திரம் துரத்த, அவன் எதிர் திசையை ஏக்கத்தோடு பார்த்தான். ஒரு ஒளி வட்டத்தைப் பார்த்துவிட்டு, அது வருவது வரைக்கும் காத்திருக்க விரும்பாததுபோல், அதை நோக்கி ஓடினான். அதன் மேல் மோதப்போவது போல், மூச்சு முட்ட, தாவினான். அந்த லாரி படாத பாடுபட்டு, அவன் மீது மோதாக் குறையாய் நின்றது. டிரைவர் கத்தினார். “உனக்கு அறிவிருக்கா? சைடுல நின்னு கையாட்டினால் நிறுத்த மாட்டேனா? சரி. சரி. ஏறு. காசு. இருக்குல்லா.

அந்த லாரியின், பின்பக்கம் உள்ளே இருப்பதைக் காட்டாத தார்ப்பாய் மேல், பத்துப் பதினைந்து பேர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/37&oldid=1248860" இலிருந்து மீள்விக்கப்பட்டது