பக்கம்:வாடா மல்லி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 17


களைப்பில் தன் தலையை அவன் மார்புமீதும் சாத்திக் கொண்டான். ஒரு சில நிமிடங்கள், அந்த லாரி விட்டுவிட்டு வரும் மரம் செடி கொடிகள் போல், அவன் மன உளைச்சல்களும், நின்றுவிட்டது போன்ற ஏகாந்த உணர்வு. திடீரென்று பழைய உளைச்சல்களும் பஸ்ஸில் பட்ட பாடும் அவனுக்குள் புதிய சுமையாக கனத்தன. அந்த மனித நெருக்கடிக்குள் அங்குமிங்குமாய் நெளிந்தான். ஒவ்வொரு உராய்விலும் ஒருவிதமான கூச்சம். இனிமேலும் இருக்க முடியாத பதற்றம். அவன் அழுதழுது கத்தினான்.

“என்னை எறக்கிடுங்க... எறக்குறீங்களா.. எழுந்து குதிக்கட்டுமா?”

டிரைவர், அவன் சொன்னதைக் காதில் போடாதது போல், வண்டியைப் போக வைத்தபோது, சுயம்பு இருக்கை யைவிட்டு எழுந்தான். உடனே அவர் கோபமாக பிரேக்கை அழுத்திக்கொண்டு ஒப்பன் வீட்டு வண்டி மாதிரி ஏறுறது. அப்புறம் ஒம்மா வீட்டு வண்டிமாதிரி இறங்குறதா? இந்தாடா மோகன். இந்த சனியன்கிட்ட வாங்குன ரூபாய் மூணு தடவை தலையை சுத்தி கொடுத்திடு. இந்தா ரூபா. சரியான சாவுக் கிராக்கி.” என்றார். அந்த மெட்ராஸ் டிரைவரிடம் ரூபாயை வாங்கிய மதுரைக் கிளீனர் மோகன், ரூபாயும் கையுமாய் மூன்று தடவை, தனது தலையைச் சுற்றி உள்ளங்கைக்குள் வைத்துக் கொண்டு, சுயம்புவின் கையை சும்மாத் தொட்டுவிட்டு சந்தடிச் சாக்கில் அந்தப் பணத்தைப் பைக்குள் வைத்துக் கொண்டான். பிறகு, உள்ளங்கையை விரித்து சுயம்புவின் கையைப் பிடித்து இழுத்து அவனைக் கீழே குதிக்க விட்டான்.

சுயம்பு, போகிற லாரியைப் பொருட்படுத்தாமல் கூனிக் குறுகி நின்றான். ஓடுகிற லாரியிலிருந்து ஒன்று டமாரென்று கீழே விழுந்தது. அப்படிப் பிணமாய் விழுந்த சூட்கேஸை அவன் எடுத்துக்கொண்டான். வழக்கம்போல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/39&oldid=1248865" இலிருந்து மீள்விக்கப்பட்டது