பக்கம்:வாடா மல்லி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 19


விலகு என்பதுபோல் துஷ்டமிருகங்கள்கூட அவனைப் பார்த்துப் பதுங்கின. துஷ்டத் தனமான லாரிகள்கூட அவன் அருகே பரம சாதுவாகப் போயின. ஒரு காரில் போன இன்ஸ்பெக்டர் ஒருவர்கூட, ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்போல், அவனைப் பார்த்து, திடுக்கிட்டு, மறுபக்கம் முகத்தைத் திருப்பிக்கொண்டு கண்டுக்காமலே’ போனார். அவன், கொள்ளையடித்தவன் போலவும், கொள்ளை அடிக்கப்பட்டவன் போலும், நடந்தான். சவுக்குக் காடுகளைத் தாண்டி, மொட்டை வெளிகளைக் கடந்து, மலை ரோட்டில் சரிந்து, கால்கள் இருப்பதே தெரியாமல், வலி என்ற வாதையில்லாமல், மூச்சு விடுவதே தெரியாமல், மூர்ச்சையாகாமலே நடந்தான். சித்தபுருஷன் போலவும் செத்த புருஷன் போலவும் முப்பது கிலோ மீட்டருக்கு மேலே நடந்துவிட்டான். இந்த அசுர நடைக்கு சாட்சியாக கால்கள் வீங்கிப் போயிருந்தன. கண்கள் அபாயக் கலரில் எரிந்துகொண்டிருந்தன. பெட்டி உரசி, உரசி இடுப்பின் இரு பக்கமும் ரத்தக் கோடுகளைப் போட்டிருந்தன.

அந்தத் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து ஊருக்குப் பிரியும் கப்பிச்சாலை வழியாக ஊர் முனைக்கு வந்ததும், அவனுக்கு உதறல் வந்தது. அந்தப் பக்கமுள்ள சமூகக்காடு எதுவுமே இல்லாத சூன்யக் கருப்பாகத் தெரிந்தது. சூரிய ஒளியைக்கூட பிடித்துப் பிடித்து உண்டுவிட்டு, இருட்டு இருட்டாய் ஏப்பமிடும் ஆயிரக்கணக்கான கருவேல மரங் களின் அடிவாரங்களில் பல இடங்களில், காய்த்தல்’ தொழில் மட்டும் நடந்து கொண்டிருந்தது. அவன், அந்தக் கருவேலங்காட்டைத் தாண்டி, ஆதி திராவிட மக்களின் தொகுப்பு வீடுகளின் பக்கம் வந்தான். அந்த வீடுகளை ஒரு குடும்பத்தில் பிறந்த மகன்களும் மகள்களும் ஒட்டு மொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டதால், அவை தேவைப்பட்ட, அதே இனமக்கள் கைவேறு கால் வேறாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/41&oldid=1248868" இலிருந்து மீள்விக்கப்பட்டது