பக்கம்:வாடா மல்லி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 சு. சமுத்திரம்


வாசலிலேயே நின்ற அம்மாவைப் பார்த்து, “உன் வேலையப் பார்த்துக்கிட்டுப் போம்மா. உன்னாலதான் இந்தக் கேடு” என்று சுயம்புவே அதட்டினான். உடனே வெள்ளையம்மாள், “அந்தப் பாவி மனுஷன் என்னைப் பழி வாங்குறதுக்காக கடைசிக் காலத்துல என் கண்ணுல காட்டப்படாதுன்னு, நான் பெத்த மவ மரகதத்த கண் காணாத எடத்துல, பாழுங்கினத்துல தள்ளுறார்... நீயுமாடா அம்மாவை இப்படிப் பேசறே?” என்று புலம்பிக் கொண்டே நின்றாள். பிறகு மரகதம் போ. போ’ என்பது மாதிரி கையாட்டியதால், அதில் ஏதாவது அர்த்தம் இருக்குமென்று உள்ளே போய்விட்டாள்.

மரகதம், தம்பியின் கையைப் பிடித்து, விரல்களுக்குச் சொடக்குப் போட்டாள். அவன் கலைந்த தலையைச் சரிப் படுத்தினாள். “எந்த வார்த்தை பேசுனாலும் காலேஜுக்கு போகமாட்டேன் என்கிற பேச்சு மட்டும் பேசாதடா” என்றாள். சுயம்புவும் அக்காவின் இரண்டு கைகளையும் எடுத்து தோளுக்கு போட்டபடியே மன்றாடினான்.

“எக்கா... என்னால காலேஜுக்கு போக முடியாதுக்கா, இந்தத் தங்கச்சியை கைவிடாதக்கா... ஆமுன்னு சொல்லுக்கா. அப்பதான் இந்தத் தங்கச்சி வீட்டுக்குள்ள வருவேக்கா...”

மரகதம் திகைத்துப் போனாள். என்ன பேசறான்.

தங்கச்சி, தங்கச்சின்னு. என்ன வந்துட்டுது இவனுக்கு?

3

மரகதம், தம்பியின் இரண்டு கைகளையும், தனது ஒரு கையில் பிடித்து, வலுக்கட்டாயமாக இழுத்துக்கொண்டு வந்து, உள்ளறைக்குள் விட்டாள். சுவரோடு சுவராய் சாத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/48&oldid=1248877" இலிருந்து மீள்விக்கப்பட்டது