பக்கம்:வாடா மல்லி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 சு. சமுத்திரம்


“உனக்கு என்னடி தெரியும். அப்படி சாகறவங்கதான் பேயா அலைவாவ. போன வருஷம் இறந்துதுலருந்து அந்த சீதாலட்சுமி கருவக் காட்டுல லாந்துனாள். நானே ஒரு தடவ அவளப் பார்த்தேன். ஊர்லயும் சொன்னாவ... ஆனா இப்போ அப்படி அவ லாந்துரது இல்ல. ஏன் தெரியுமா? அவள்தான், இவனைப் பிடிச்சுக்கிட்டு இவன் கூடயே காலேஜுக்குப் போறாளே. அப்புறம் அங்க இருக்க முடியாம இவன இங்க கூட்டிக்கிட்டு வந்துடுறாளே. நம்ம வீட்டுக்கு வரும்போதெல்லாம் இவன வாய்க்குவாய், தம்பி. தம்பின்னு சொன்ன... மூதேவி... இப்ப அவனையே தங்கச்சி. தங்கச்சின்னு சொல்ல வச்சுட்டாள்.”

“இவன் அப்படி சொன்னான்னு உனக்கு எப்படிம்மா தெரியும்.”

“எல்லாம் நான் கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன். பூவம்மா மயினிகிட்ட சொல்லி திருநீர் போட்டா சரியா யிடும். ஏல சுயம்பு வந்ததே வந்திய. உன் அண்ணன் பிள்ளைகளுக்கு, ஏதாவது இனிப்பு கினிப்பு வாங்கிட்டு வரப்படாதா...”

“எம்மா. மொதல்ல நீ இடத்தை காலி பண்ணு. தம்பி

துஷ்டி கேக்கற நிலையில இருக்கான். நீ எக்காளமாவா பேசுற. அம்மாக்காரியாம். அம்மா. போம்மா.”

“பாவி மொட்ட. என்ன பேச்சு பேசறாள். எனக்கு மட்டும் மனசு துடிக்காமலா இருக்கும்.”

“உனக்கு வாய் துடிக்கிற அளவுக்கு மனசு துடிக்கல போம்மா.”

மரகதம், அம்மாவின் முதுகைப் பிடித்து தள்ளித் தள்ளி, அவளை அந்த அறைக்கு வெளியே கொண்டு போய் விட்டாள். அப்படியும் வெள்ளையம்மா காலஞ்சென்ற சீதாலட்சுமியை திட்டிக்கொண்டே உள்ளே வரப் போனாள். அதற்குள் மரகதம் கதவைத் தாளிட்டாள். பிறகு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/52&oldid=1249180" இலிருந்து மீள்விக்கப்பட்டது