பக்கம்:வாடா மல்லி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 31


பித்துப் பிடித்து நின்ற சுயம்புவை தூக்கி நிறுத்தி, கட்டில் பக்கமாய் நகர்த்தி, அவனை உட்கார வைத்தாள். எதுவும் நடக்காததுபோல பேசினாள்.

“சரி. எப்ப சாப்பிட்டியோ. முதல்ல சாப்பிடுடா...”

“என்னை உள்ள இருந்து ஏதோ ஒன்னு தின்னுக்கிட்டே இருக்குக்கா. பாம்பு, தவளையைப் பிடிக்குமே அப்படி... காக்கா ஒணானைக் கொத்திக் கொத்தி விளையாடுமே அப்படி. என்னால எப்படிக்கா சாப்பிட முடியும்? எக்கா நான் காலேஜுக்கு போகமாட்டேன். சரியா...”

மரகதம் அவனுடன் பேசவில்லை. ஊரே வியக்கும்படி படித்து எல்லோரிடமும் சகஜமாகப் பழகும் தம்பிக்கு இப்படிப்பட்ட ஒரு எண்ணம் எப்படி ஏற்பட்டிருக்கும் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டாள். அவன் உயர உயரப் போவதே கீழே விழுவதற்குத்தானோ என்று ஆபாசப்பட்டாள். கிட்டத்தட்ட சுயம்பு மாதிரியே அவள் விக்கித்து நின்றபோது, சுயம்பு அக்காவை உலுக்கினான்.

“எக்கா. எக்கா. உனக்கு பேசிமுடிச்ச மாப்பிள்ளைய பாத்துட்டு வராம போய்ட்டேன்... எனக்கு வந்த கோளாறுல, உனக்கு வந்த மாப்பிள்ளைய மறந்துட்டேனே. நானெல்லாம் ஒரு தம்பியா... ஆனா ஒண்ணுக்கா, காலேஜுக்கு போகாதது மாதிரி அங்கயும் போகமாட்டேன்னு நினைக்காத. நீ மட்டும் இனிமே ன்ன்ன காலேஜ-க்குப் போகாதபடி பார்த்துக்க... நாளைக்கே போய் மாப்பிளைய பாத்துட்டு வந்துடறேன்.”

மரகதத்திற்கு இப்போது தம்பியிடம் என்ன பேச வேண்டும் என்பது தெளிவாகிவிட்டது.

“உங்க அக்காவைப் பத்தி என்னடா நினைச்சுக் கிட்டே... நீ காலேஜுக்குப் போகாம, நான் யாருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/53&oldid=1249181" இலிருந்து மீள்விக்கப்பட்டது