பக்கம்:வாடா மல்லி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 சு. சமுத்திரம்


கழுத்தை நீட்டுவேன்னு நினைச்சியா... அதுதான் நடக்காது.”

“எக்கா... என்னக்கா சொல்லுற. அப்படியெல்லாம் தத்துபித்துன்னு பேசுனால... என்னால தாங்கிக்க முடியாது.”

“நீ காலேஜுக்கு போகாம இருந்தால். அதமட்டும் என்னால தாங்கிக்க முடியுமா...”

“எக்கா.எக்கோ.”

“ஆமாடா இது ஒப்புக்குச் சொல்ற வார்த்தையில்லடா. நீ படிப்பை விட்டுட்டு உன்ன சீரழிய விட்டுட்டு. இந்த அக்காவால வேற ஊர்ல இருக்க முடியாது.டா...”

சுயம்பு விக்கித்துப் போனான். அக்காவை அப்படியே கட்டிப்பிடித்து கேவினான். அவளோ கால்களை நீட்டி தம்பியை மடியில் போட்டுக்கொண்டு, ஊரில் படித்து முன்னுக்கு வந்தவர்களின் கதைகளை சொல்லப் போனாள். இதில் அக்கா, அம்மாவானாள். தம்பி மகனானான்.

4

பிள்ளையார், தோட்டத்திற்கு போய் வந்ததன் அத்தாட்சியாய், தலையில் ஏறிக் கிடந்த ஒரு சுமை அகத்திக்கீரைக் கட்டை, தொப்பென்று முற்றத்தில் போட்டார். தலையில் பாம்பு மாதிரி சுருட்டி வைக்கப் பட்டிருந்த துண்டை எடுத்து ஒரு முனையைப் பிடித்து உதறியபடியே, சமையலறைத் திண்ணையில் உட்கார்ந்தார். பொதுவாக, தோட்டத்திற்குக் காலையில் போனால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/54&oldid=1249184" இலிருந்து மீள்விக்கப்பட்டது