பக்கம்:வாடா மல்லி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 33


அங்கேயே இரண்டு தேங்காய் பறித்து, வயித்த நிரப்பிக் கொள்பவர், மத்தியானம் சாப்பாட்டுச் சமயத்தில் மட்டும்தான் வருவார். ஆனால், இன்று தோட்டத்திற்குப் போன வேகத்திலேயே திரும்பிவிட்டார். எதிர் அறைப் படிக்கட்டில் லுங்கியும் பனியனுமாக இருந்த சுயம்புவை நோட்டம் விட்டபடியே, தட்டில் பழைய அரிசிச் சோற்றைத் தேங்காய்த் துவையலோடு பிசைந்து கொண்டிருந்த ஆறுமுகப் பாண்டியைப் பார்த்துக் கேட்டார்:

“ஏடே. பெரியவன். இவன் இன்னும் போகலை? நான் என்னடா சொல்லிட்டுப் போனேன்? தோட்டத்துல இருந்து திரும்பும்போது, ஒண்னு நான் இவன் கண்ணுல படப்படாது. இல்லாட்டா, நான் ஒங்க கண்ணுல படமாட்டேன்னு சொன்னத மறந்திட்டியுளா ? செருக்கிமவன். கரிவலிச்சி வாரான். பெரிய படிப்புன்னா கஷ்டமாத்தான் இருக்கும். இந்த ஒரு மாதத்லயே ரெண்டு தடவை அவன் வரும்போதே எனக்கு சந்தேகம்... ஒவ்வொருத்திவள மாதிரி நான் வாக்குத் தவறுற வம்சம் இல்லடா. இப்ப அவன் போறானா. இல்ல நான் போகனுமான்னு கேளு.”

தப்பித் தவறி ஒரு வார்த்தை வாயிலிருந்து விழுந்து விட்டாலும், அந்த ஒரு சொல்லில் நிற்கும் அப்பாவின் போக்கை அறிந்திருக்கும் ஆறுமுகப் பாண்டி, பாதிச் சோற்றைச் சாப்பிடாமலே கையைக் கழுவினான். இதற்குள், மரகதம் ஓடிவந்து தம்பியின் தோளில் பாண்ட் சட்டையைத் தொங்கப் போட்டு, அவனைத் துக்கி விட்டாள்.

மரகதம், தம்பியை ஆடையை மாற்றிக்கொள்வதற் காக, பக்கத்து அறைக்குத் தள்ளிவிட்டாள். அவனும், அக்காவின் வார்த்தைக்கு மரியாதை கொடுப்பதுபோல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/55&oldid=1249186" இலிருந்து மீள்விக்கப்பட்டது