பக்கம்:வாடா மல்லி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 சு. சமுத்திரம்


சிறிது நடந்து, மீண்டும் அவள் பக்கமே வந்தான். தலையை அங்குமிங்குமாய் ஆட்டி ஒலமிட்டான். அக்காவிடம் மெளனச் சம்மதமானவன், இப்போது மீண்டும் முருங்கை மரம் ஏறப்போவதுபோல் அபலத்தோடு பேசினான்.

“நான் போகமாட்டேன். காலேஜுக்குப் போக மாட்டேன். எனக்குப் பயமா இருக்கு. பயத்தைத் தாங்க முடியலை.”

“என்னடா பயம், பொல்லாத பயம்! நம்மள மீறி எப்படிடா பயம் வரும்? எங்கே அக்கா முகத்தைப் பார்த்துச் சொல்லு. எப்படி பயம் வரும்.”

சுயம்பு, அக்காமூலம் அனைவருக்கும் எதையோ ஒன்றைச் சொல்லப் போனான். அதற்குள், அவன் தந்தை பிள்ளையார், திண்ணையிலிருந்து துள்ளி எழுந்து சுவரில் சாத்தப்பட்ட சாட்டைக் கம்பை எடுத்தார். உடனே வெள்ளையம்மா, “இதுக்கு மட்டும் குறைச்சலில்லே. அவன் சுயமாவா பேசறான்? எல்லாம் அந்தப் பாழாப் போற பய பொண்டாட்டி சீதாலட்சுமி படுத்துற வேலை” என்றாள். உடனே அவர் மகன் மேல் குறிவைத்த சாட்டைக் கம்பை, மனைவிக்குக் குறியாக்கியபடியே கத்தினார்.

“எல்லாம் இந்தப் பொம்பளைங்க கொடுக்கிற இடம் தான். செருக்கி மவன நல்ல வார்த்தையா சொல்லி துரத்துரத விட்டுட்டு தாலாட்டுப் போடுறாளுவ, தாலாட்டு. எப்படி உருப்படுவான்? இப்ப சொல்றது தான் சொல்லு. அவனுக்குப் படிக்க முடியாட்டால் எந்தக் ‘காட்டுக்காவது ஒடிப் போகட்டும். இங்க வரப்படாது. நல்லாப் படிச்சு ஒவ்வொரு பரீட்சை வீவுலயும் ராசா மாதிரி வரட்டும். நான் வேண்டாங்கலை. அப்படி இல்லாம, இப்படி வந்தால், ஒண்னு இந்த வீட்ல அவன் இருக்கணும். இல்லேன்னா நான் இருக்கணும்... சீதாலட்சுமி. படுத்துறாளாம். கரிவலிச்சு’. வந்திருக்கான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/56&oldid=1249188" இலிருந்து மீள்விக்கப்பட்டது