பக்கம்:வாடா மல்லி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 37


அடங்கினாலும் மனத்தளவில் வீறிட்டாள். கடந்த ஒன்பதாண்டு காலத்தில் முதல் மூன்று மாதங்களை மட்டும் போனளாக விட்டுவிட்டு, அண்ணிக்காரி, சொல்லுக்குச் சொல் ‘அடுத்த வீட்டுக்குப் போறவள் என்று இடித்து இடித்துச் சொல்கிறாள் - இவள் என்னமோ இதே வீட்டில் பிறந்ததிலிருந்தே இருப்பவல்போல. இருபத்திரண்டு ஆண்டுகளாக எந்த வீட்டில் பிறந்தாளோ, நடமாடு கிறாளோ, அந்த வீட்டிலிருந்து, ஒரு ஒன்பது வருஷக்காரி, துரத்தப் பார்ப்பதைக் கண்டு மரகதம் மருண்டுபோனாள். அந்த வீட்டிலிருந்து அந்த ஊருக்கு ‘அது’ எப்படிப் பட்டதாக இருந்தாலும், போய்த் தொலைய வேண்டும் என்ற விரக்தி,

இப்போது ஆறுமுகப்பாண்டி. தம்பியை உசுப்பினான்.

“சீக்கிரமாகச் சட்டையைப் போடுடா. இப்ப புறப் பட்டாத்தான், பஸ்ஸப் பிடிச்சு, ரயிலைப் பிடிச்சு சாயங் காலத்துக்குள்ள போக முடியும்.”

சுயம்பு கையெடுத்துக் கும்பிட்டுப் புலம்பினான்: “என்னால எதுவும் செய்ய முடியலே அண்ணே. என்னக் காப்பாத்து அண்ணே. எனக்கு படிப்பும் வேண்டாம் கிடிப்பும் வேண்டாம். வயலும் வேண்டாம். வாசலும் வேண்டாம். உன் காலடியே போதும்.”

ஆறுமுகப் பாண்டி, அரண்டுபோய் நின்றபோது, பிள்ளையார் மீண்டும் போர்க்குரலில் பேசினார்.

“டேய் பெரியவன். நான் போறேண்டா. திரும்பி வராத இடத்துக்கா போறேண்டா. உன் தங்கச்சி மரகதம் கலியாணத்தை நல்லா நடத்துடா.”

பிள்ளையார், துண்டை உதறினார். சுயம்பு, சும்மாவே இருந்தான். இதற்குள் மரகதம் அங்கேயே அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/59&oldid=1249193" இலிருந்து மீள்விக்கப்பட்டது