பக்கம்:வாடா மல்லி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 சு. சமுத்திரம்


தலைக்குள் சட்டையை நுழைத்தாள். பாண்டை எடுத்து அவன் கால் பக்கம் கொண்டு போனாள். பிள்ளையாரோ, பேரப் பிள்ளைகளைக் கன்னத்தில் தட்டிவிட்டு, போகப்போவது போலிருந்தார். சுயம்புவால் பொறுக்க முடியவில்லை. சப்தம் போட்டுப் பேசினான்.

‘போறதாய் இருந்தால், லுங்கியோடதான் போவேன்.”

அறைக்குள் போய் லுங்கியைக் கட்டிக்கொண்டு வெளியே வந்த தம்பியிடம், ஆறுமுகப்பாண்டி சூட்கேஸை நீட்டினான். பிறகு இடுப்பில் குழந்தையோடு நின்ற மனைவியிடம் சில ரூபாய் நோட்டுக்களை நீட்டினான். அவள், அவற்றைக் குழந்தையின் கையில் கொடுத்து மைத்துனனை நெருங்கி, அவனது சட்டைப் பைக்குள் குழந்தையின் ரூபாய்க் கரத்தை உள்ளே விட்டாள். அந்தக் குழந்தை ரூபாய் நோட்டைக் கொடுக்காமல், அவன் சட்டைப் பைக்குள் என்ன கிடைக்கும் என்பதுபோல் துழாவியது. உடனே அந்தக் குழந்தையின் கையைத் திருகி, அவளே ரூபாயைப் போட்டாள்.

சுயம்பு, திரும்பித் திரும்பி நடந்தான். வேப்பமரத்தைத் தாண்டி, அந்த வாதமடக்கிப் பக்கம் போனான். பெட்டியை அங்கேயே வைத்துவிட்டு அக்காவை நோக்கி ஓடி வந்தான். அவளைக் கட்டிப்பிடித்து, அவள் இரண்டு கைகளையும் தன் கரத்திற்குள் சங்கமமாக்கிக் கொண்டு, அவள் காதில் கிசுகிசுத்தான். உடனே அவள், அழவில்லையானாலும், விம்மினாள். தம்பியின் தலையைக் கோதிவிட்டபடியே, “என் பிரச்னையை விடுடா. நீதான் இப்ப எனக்குப் பிரச்னை” என்றாள். பிறகு அவன் நெற்றியில் முத்தமிட்டு, அவனைத் திருப்பிவிட்டாள். அம்மாக்காரி பார்வையால் கேட்டாள். அண்ணன், வார்த்தையாலே கேட்டான்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/60&oldid=1249195" இலிருந்து மீள்விக்கப்பட்டது