பக்கம்:வாடா மல்லி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 43


சொல்லிவிட்டு அவன் பதிலையே ஆவலோடு எதிர் பார்த்தாள். அவனும் பேசினான்.

“மலர். மலர்.”

“இதுக்குமேல பேச வராதா?”

“ஏன் வராது. உன் கழுத்துல தொங்குற பூவில பாதி யாவது கொடேன்.”

“இந்தாங்க. முழுசாவே எடுத்துக்குங்க. அப்பாடா.. நான் வாழ்வதற்கு இன்னிக்குத்தான் அர்த்தம் புரியுது...”

மலர்க்கொடி, கழுத்தில் மாலையான பூவை எடுத்து, மனத்தில் மணவாளனாய்ப் பூத்தவனின் உள்ளங்கையில் திணித்தாள். அப்போது, அவள் வலது கைப் பெருவிரல், அவன் இடதுகை மணிக்கட்டில் உரசியது. அவள் சிலிர்த்தாள். பூப்பெய்ததன் பூரணத்தைப் புரிந்தவள்போல் அவன் பக்கமாய் நகர்ந்தாள். அக்கம் பக்கம் பார்த்து ஆள் இல்லை என்ற மகிழ்ச்சியில் அவனை நெருங்கினாள். நெருக்கினாள். கண்கள் அவன் காலடியில் அலை பாய, நாணப்பட்டும், நளினப்பட்டும் நின்றாள். ஆனாலும், சுயம்பு அவள் எதிர்பார்த்ததுபோல், அவளது தலையில் பூச்சூட்டவில்லை. ‘எதுக்காகத் தயங்கணும் ? என்ற முணுமுணுப்போடு அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.

சுயம்பு, அந்த இரண்டு முழம் பூவையும் தனது பிடறியில் சுற்றிக் கொண்டதைப் பார்த்து, மலர்க்கொடி வயிறு குலுங்க, வாய்விட்டுச் சிரித்தாள். எப்படி விளையாட்டுக் காட்டுறார்? சிறிது நேரத்தில் அவள் சிரித்த முகம் சீறும் முகமாவது போலிருந்தது. அவளைப் பற்றிக் கவலைப்படாமல் ஒரு சின்னச் சிரிப்பை மட்டும் கொடுத்துவிட்டு

சுயம்பு, பிடறியில் கட்டிய மல்லிகைப் பூவை வருடி விட்டபடியே கீழே வைத்த சூட்கேஸைத் துாக்கிக்கொண்டு நடந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/65&oldid=1249202" இலிருந்து மீள்விக்கப்பட்டது