பக்கம்:வாடா மல்லி.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
என்னுரை

மானுடம் என்றதுமே, நமக்கு ஆண், பெண் என்ற இரட்டைப்பிறவிகளே நினைவுக்கு வருகிறது. இதோ, நாங்கள் மூன்றாவது பிறவியாக நடமாடுகிறோம்.’ என்று ஆண் உடம்பில் பெண் மனதையும், பெண் உடம்பில் ஆண் மனதையும் தாங்கி நிற்கும் மானுடப் பிறவிகள், நம் கண்ணில் பட்டாலும் கருத்தில் பதிவதில்லை. உடல் ஊனமுற்றோருக்கும் மற்ற பலவீன பிறவினருக்கும் பச்சாதாபப்படும் நாம், இந்த அப்பாவிகளைப் பார்த்ததுமே சிரிக்கிறோம். இவர்களைப் பயங்கரப் பிறவிகள் என்று அனுமானித்து ஒதுங்கிக் கொள்கிறோம்.

எனது இளமைக் காலத்தில் டெல்லியில் உள்ள அலிகளை பிள்ளை பிடிப்பவர்களாகக் கருதி நானும் ஒதுங்கி இருக்கிறேன். ஆனாலும் ஏழு, எட்டு ஆண்டு களுக்கு முன்பு கடலூருக்கு அருகேயுள்ள மஞ்சக்குப்பம் என்ற கிராமத்தில் கூவாகத்தில் நடப்பது மாதிரியான அலிகளின் கூத்தாண்டவர் விழாவைக் காணும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அப்போது தென்னாற்காடு மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றிய திரு. சுபாஸ் அவர்களோடு, அங்கே சென்றதும், அலி தோழர்களிடம் அல்லது தோழியரிடம் உரையாடியது இன்னும் மனதில் ஆணி குத்தியதுபோலவே வலிக்கிறது. இந்த அப்பாவிகள் படும் பாட்டையும், அவர்கள் கேலிப் பொருட்களாய் - உண்டு கொழுத்தோரின் நேரப் போக்குகளாய் ஆகிப்போனதையும், அவர்கள் மூலமே கேட்டு ஆடிப் போனேன். இத்தகைய கூத்தாண்டவர் விழாக்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/7&oldid=1248933" இலிருந்து மீள்விக்கப்பட்டது