பக்கம்:வாடா மல்லி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 சு. சமுத்திரம்


“என் போதாத காலம் சுயம்புகிட்ட கேக்க முடியலை. சொல்லித் தொலைடா. நாளைக்கு அந்த நடிகை சினிமா தியேட்டர்ல தோன்றப் போறாளாம்; கூட்டிட்டுப் போறேன்.”

‘வகுப்புல பாடத்தைக் கவனிக்காம எவளடா கவனிச்சே?” -

“கமலாவை. அவள் என்னடான்னா உன்னை சைட் அடிக்காள். இப்பவாவது உச்சி குளிர்ந்ததா?. இன்னும் நீ சொல்லலன்னா ஒனக்கும் தெரியலைன்னு அர்த்தம்.”

முத்து, பேராசிரியர் லிங்கையா போலவே உதட்டைக் கடித்துக் கொண்டு, வயிற்றைக் குலுக்கினான். வாயே இல்லாமல் அந்த இடத்தில் ஏதோ ஒரு முடிச்சு இருப்பது போலவும், அதை அவிழ்க்கப் போகிறவன் போலவும், ‘மிமிக்கிரியோடு பேசினான்.

‘ஒரு கண்டக்டரில் - அதுதான். மின் கடத்தியில் ஏற் படும் மின் அழுத்தம், அந்த கடத்தியில் ஒடும் மின்னோட்ட அளவையும், அதன் மின் தடை அளவையும் பெருக்கினால் எவ்வளவோ, அவ்வளவு. இதுக்குப் பேருதான் ஓம்ஸ் லா. அதாவது ஒமின் விதி. இதுதான் நம்ம சப்ஜெக்டுக்கே பிள்ளையார் சுழி. ஓம்ஸ் என்பவர் இதைக் கண்டுபிடித்த தால் இதற்கு ஓம்ஸ் லா என்று பெயர்.”

மூர்த்தி முத்துவை வியந்து பார்த்தபோது, தரையே பேசுவது போல் ஒரு சத்தம் கேட்டது.

“அட் கான்ஸ்டன்ட் டெம்பரேச்சர். அதாவது ஒரு நிலையான வெப்ப நிலையில்தான், ஓம்ஸ் லா பொருந்தும். வெப்ப நிலை மாறினால், அது லா இல்ல. கலாட்டா. இந்த லாவுக்கு கான்ஸ்டன்ட் டெம்பரேச்சர் என்கிற பிரிகண்டிஷன் ரொம்ப முக்கியம். இதுகூடத் தெரியாத நீங்கள்லாம் ஆம்புளைங்களாடா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/70&oldid=1249209" இலிருந்து மீள்விக்கப்பட்டது