பக்கம்:வாடா மல்லி.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 49


மூர்த்தியும், முத்துவும் அதிர்ந்து போனார்கள். ஆனந்தமான அதிர்ச்சி. பிளஷன்ட் ஷாக். பழைய சுயம்பு, வந்துவிட்டான். இனிமேல் அவனிடமே பாடத்தைக் கேட்டு, கேர்ல்ஸ்ஸுக்கு சொல்லிக் கொடுக்கலாம்...”

மூர்த்தியும், முத்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். உடனே முத்து தரையில் தவழ்ந்தான். மூர்த்தியின் காலை விலக்கும்படி கண்ஜாடை காட்டி விட்டு, பதில் சொல்வதற்காகத் துாக்கிய தலையை மீண்டும் தரையில் போட்டுக்கொண்டு குப்புறக் கிடந்தவனின் அருகே போய் உட்கார்ந்தான். அவன் கழுத்துக்குக் கீழே, தனது கையைக் கொண்டுபோய் அவன் முகத்தை நிமிர்த்தினான். பிறகு அந்தக் கையை மெள்ள மெள்ள நகர்த்தி, சுயம்புவின் மார்புக்குக் கொண்டுபோய், அவனை ஒரு கையால் துக்கி, தன் பக்கமாக் கொண்டு வந்தான். சுயம்பு அவன் மடியில் மல்லாந்து விழுந்தான். அவன் கண்களோடு தன் கண்களை நெருடவிட்டான். அவனது உருண்டு திரண்ட தோள்களில் கண்களை அலைய விட்டான். பிறகு தலையைச் சற்று நகர்த்தி, அதை அவன் வயிற்றில் போட்டுக்கொண்டு அண்ணாந்து பார்த்தான். முத்து, அவன் கழுத்தை நீவிவிட்டபடியே “எழுந்திருடா, எழுந்திருடா” என்றான். உடனே கட்டிலில் கிடந்த மூர்த்தி ‘எதுக்குடா பயப்படுறே... நாங்க இருக்கோம்டா... போடா... போய் முகத்தைக் கழுவிட்டு வாடா என்று ஆறுதல் குரலில் பேசினான். ஆனால், மூர்த்தி சொன்னது கேட்காததுபோல், முத்துவின் மடியில் கிடந்த சுயம்பு, திடீரென்று துள்ளி எழுந்தான். கால்களைத் தரையில் போட்டுத் தாண்டவமாடியபடி கைகளை அங்குமிங்குமாய் அபிநயம் காட்டியபடி, இருவேறு நிலைகளில் கத்தினான்.

“டேய் முத்து... எப்படிடா என்னைத் தொடலாம்?... நீ பெரிய ஆணழகனாவே இருந்துட்டுப் போ... அதுக்காக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/71&oldid=1249210" இலிருந்து மீள்விக்கப்பட்டது