பக்கம்:வாடா மல்லி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 சு. சமுத்திரம்


இப்படி என்னைப் பாடாப் படுத்தனுமா?. கேட்கிறதுக்கு ஆள் இல்லன்னு நெனப்பாடா. இனிமே இப்படி தொடுற வேலை வச்சே. அப்புறம் மரியாதி போயிடும்.”

சுயம்பு, இரு கரங்களாலும் கண்களை மூடியபடியே அசையாது நின்றான். பிறகு வெறுமையும் வெறியும் கொண்ட பார்வையோடு, அந்த அறைக்கு வெளியே வந்தான். மீண்டும் உள்ளே வந்து செருப்புக்களைக் கழற்றி எறிந்துவிட்டு, வெறுங்காலோடு வாசல்படியைத் தாண்டி னான். முத்துவும் மூர்த்தியும் ஒடிப்போய் அவனை இரு பக்கமும் சூழ்ந்தபடி மாறிமாறிக் கெஞ்சினார்கள்.

“இப்போ என்னடா நடந்துட்டுது. வாடா ரூமுக்கு குள்ள...”

“உன் புத்தி எனககுதி தெரியும். போடா...” “டேய் அந்த தடியனுக்காக வராட்டாலும், என் முகத்துக்காவது வாடா...”

சுயம்பு சலித்து நின்றான். அவர்களை உஷ்ணமாகப் பார்த்தான், குளிர்காயும் உஷ்ணம். எரிக்கும் உஷ்ணமல்ல. பிட்டத்தை ஆட்டிக்கொண்டு கைகால்களைக் குழைய விட்டு, சிணுங்கியபடி சிரிப்பதுபோல் பேசி, அழுவதுபோல் முடித்தான்.

“தனியாப் போற என்கிட்ட ஏண்டா வம்பு செய்யுறீங்க. என்ன விடுங்கடா. விட்டுத் தொலைங்கடா. இந்த பாரு. கையப் பிடிச்சே அப்புறம் நடக்கிறது வேற.”

[6]

சுயம்பு, வேகித்தும், விறுவிறுத்தும், படிகளில் குதித்துக் குதித்துக் கீழே இறங்கினான். அவன் வேகத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/72&oldid=1249211" இலிருந்து மீள்விக்கப்பட்டது