பக்கம்:வாடா மல்லி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 51


பார்த்துப் பயந்துபோன ஒரு நாய்கூட மல்லாக்கப் படுத்துக் கால்களை மேலாகத் துக்கி சரண்டரானது. ஆனாலும், அவன் அதைக் கவனிக்காமல் ஏதோ ஒன்று யந்திரமோ அல்லது மந்திரமோ அவனை உள்ளிருந்து ஒட்டுவதுபோல் ஓடினான். ஒடி ஒடி அவன் அந்த விளையாட்டு மைதானத்திற்கு வந்தபோது அவன் உடல் உறுப்புக்கள் அனைத்தும் உள்ளிருப்பு வேலை நிறுத்தம் செய்வதுபோல் இருந்தது.

வாலிபால்காரன்களும், கூடைப்பந்துக்காரிகளும், நான்கு பக்கமும் பக்கத்துக்கு மூன்று மூன்று வரிசையாய் உள்ள மின்விளக்கு வெளிச்சத்தில் ஆடிக்கொண்டிருந் தார்கள். ஆண் கிரவுண்டில், ‘வாலிபால், நெட்'டின் முன் வரிசையில் வலது பக்கம் ஒருத்தன், பின் வரிசைக்காரன் எடுத்துக் கொடுத்த பந்தை பட்டும் படாமலும் இரு கைகளையும் தாமரைகளாகக் குவித்து ஒரு பந்தைப் பூவைத் தள்ளுவதுபோல் நெட்டிற்கு மேலே கொண்டு போகிறான். உடனே இடது பக்கம், சற்றுப் பின் தள்ளி நின்றவன் ஒரே ஒட்டமாய், ஒடி வருகிறான். நெட்டை நெருங்கி, ஒரே குதியாய்க் குதித்து அந்தப் பந்தை நெட்டில் உரச விடாமலே அதே சமயம் அதற்கு நேர் கீழாக விழும்படி ‘கட்டடிக்கிறான். அந்தப் பந்து எதிர்த் தரப்பில் விழுவது தெரியாமல் விழுகிறது. பின்னால் நின்று, சர்வீஸ் போட்டவன்கூட கட்’ அடித்தவனைக் கட்டிப் பிடித்துக் கொள்ளுகிறான். எதிர்த்தரப்பினர்கூட, நெட்டுக்குள் நுழைந்து அவனுக்குக் கை கொடுக்கிறார்கள். இப்படி, அவன் பல தடவை அடித்து அடித்து, எதிர்த் தரப்பே இல்லாமல் செய்து கொண்டிருந்தான். அந்தத் தரப்பிலிருந்து வந்த சாய்வு சர்வீஸ் பந்தைக்கூட, கடம்’ போட்டுத் தூக்கிப் பின்னால் விட்டு, மீண்டும் முன்னால் வந்ததை ஒரே பாய்ச்சலாய் பாய்ந்து எதிர்த்தரப்பில் காலி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/73&oldid=1249212" இலிருந்து மீள்விக்கப்பட்டது