பக்கம்:வாடா மல்லி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 53


ஆரம்பத்துல. எல்லா எம்.பி.பி.எஸ் பொண்ணுங்களும் எம்.எஸ்.எம்.டி. படித்தவனைத் தேடுவாளுங்க. மூணாவது வருடம்தான் கிளாஸ்மேட்கள் கண்ணுக்குத் தெரியும்” என்று பொதுப்படையாய்ச் சொன்னதை அந்த வாலிபால் காரன் தனக்குள் தக்க வைத்துக் கொண்டான். இது, இவளுக்கும் தெரியும். ஆகையால் இன்றாவது அவனை எப்படியாவது கங்கிராட்ஸ்’ சொல்லிக் கவனத்தைக் கவர வேண்டும் என்று துடியாய்த் துடித்தாள்.

இந்தச் சமயத்தில், தனது தோளில், ஏதோ ஒன்று உரசுவதைப் பார்த்து கவனம் கலைக்கப்பட்ட கோபத்தில் திரும்பினாள். சுயம்புவோ, அவளிடமிருந்து ஒரு அங்குலம் கூடப் பிரியாமல் பேசினான்.

“அவரு ரொம்ப நல்லா ஆடுறார் இல்லியா?. எம்மாடி. இப்படி யாரும் ஆடி நான் பார்க்கலை. ஆமா, இவரு பேரு என்ன. எந்த கோர்ஸ் படிக்காரு...”

“தள்ளி நில்லுடா ராஸ்கல். டர்ட்டி ஃபெல்லோ. என்னடா நினைச்சுக்கிட்டே.”

சுயம்பு, எதையும் நினைக்காமல், சும்மாவே நின்ற போது, அவள் கூச்சல் போட்டாள். அந்த ஒற்றைக் கூச்சல், வாலிபால்-கூடைப்பந்து கூட்டத்தில் எழுப்பிய கூச்சல் களை அமுக்கிவிட்டது. அவளோ, சுயம்புவைப் பார்க்காமல், அந்த வாலிபால்காரனைப் பார்த்தபடியே கத்தினாள். அவன் அங்கே வந்து, இவனை வயிற்றில் உதைத்து, கீழே வீழ்த்திவிட்டு, தன்னை வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் என்ற சினிமாத்தனமான ஆவேசம். அவன், முகம் திருப்பிப் பார்ப்பது வரைக்கும் உச்சமாய்க் கத்தினாள். அவன் பந்தை நெட்டிலேயே வீசி எறிந்து விட்டு, சகாக்களுடன் வேக வேகமாய் வந்தபோது, அவள் அழுதழுது கத்தினாள்.

இதற்குள் கூடைப்பந்துக்காரிகளும், முண்டியடித்து ஒடி வந்தார்கள். வாலிபால் பையன்களை முந்தி, அவள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/75&oldid=1249214" இலிருந்து மீள்விக்கப்பட்டது