பக்கம்:வாடா மல்லி.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Vi

இன்னும் நமது பத்திரிகைகள் “ஜாலி செய்திகளாகவே” பிரசுரிக்கின்றன. இந்த அலி ஜீவன்களுக்கு நம்மைப்போலவே உணர்வுகள் இருப்பதையும், நம்மை விட அதிகமான குடும்ப பாசம் வைத்திருப்பதையும் நாம் ஏனோ அங்கீகரிப்பதில்லை.

அலிகளைப் பார்த்த ஒரு வாரத்தில், ஒரு பத்திரிகைக்கு இவர்களின் பிரச்னையை கருப் பொருளாக்கி ஒரு சிறுகதை எழுதி அனுப்பினேன். எனது எல்லாக் கதைகளையும் பிரசுரிக்கும் அந்தப் பத்திரிகை, இந்தக் கதையை பிரசுரிக்கவில்லை. கேட்டபோது கதை தொலைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. இன்னொரு நகலை அனுப்பலாமா என்று கேட்டால், மழுப்பலான பதிலே கிடைத்தது. எனக்கும் புரிந்துவிட்டது. அலிகளிள் செக்ஸ் வாழ்க்கையை சித்திரிக்காத அந்தக் கதையைப் பிரசுரிக்க அந்தப் பத்திரிகைக்கு மனம் இல்லை... ஒருவேள்ை புனிதக் காதல்களில் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் வாசகர்கள் இந்தக் கதையை ரசிக்கமாட்டார்கள் என்ற பயமும் ஏற்பட்டிருக்கலாம்.

என்றாலும், அலிகளைப் பார்க்கும் போதெல்லாம் என் மனம் அலைக்கழிந்தது. இவர்களை வைத்து தனியாக ஒரு நாவல் எழுதி அப்படியே பிரசுரிக்க வேண்டுமென்று, ஒரு எண்ணம் ஏற்பட்டது. இதற்காக சென்னை துறைமுகத் திற்கு அருகே ‘சேரிக்குள் சேரியான சாக்கடை பகுதிக்குள் வாழும் அலிகளைச் சந்திக்கச் சென்றேன். ஆரம்பத்தில் என்னை பகடி’... அதாவது ‘கபடதாரி’ என்று நினைத்து அவர்கள் பேச மறுத்தார்கள். கால் மணி நேரத்தில், அவர்கள் மீது நான் கொண்டிருக்கும் ஆத்மார்த்தமான மனிதநேயத்தை புரிந்துகொண்டனர். ஒவ்வொரு அலியும், தத்தம் சோகக் கதையான சேலை உடுத்தல், சூடுபடல், குடும்பத்திலிருந்து பிரிதல், ஐம்பது ரூபாய்க்கு சோரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/8&oldid=1248935" இலிருந்து மீள்விக்கப்பட்டது