பக்கம்:வாடா மல்லி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 63


கத்திவிட்டு, பதிலுக்காகக் காதுகளைக் குலுக்கலாய் வைத்தபோது, கம்பவுண்டர் மாதிரியான ஒருத்தர் உள்ளே வந்து, “இன்னும் பதினாறு பேர்” என்றார். அப்படிச் சொல்லிவிட்டுப் போகாமல், அங்கேயே நின்றார் தேதி பதினைந்து. இன்னும் போன மாதச் சம்பளம் கைக்கு எட்டாக் கனியாகவே இருக்குது...!

டாக்டர், அங்குமிங்குமாய்த் தலையாட்டியபடியே ‘உம். என்றார். மூர்த்தி சொன்னான்.

“இவன் பேரு சுயம்பு.”

“ஓங்க பேரு.”

“என் பேரு ஒங்களுக்குத் தெரியாதா. உங்க சித்தப்பா மகளோட.”

“இப்ப நான் கொஞ்சம் பிஸி. விஷயத்தைச் சொல் lங்களா..”

“இதோ நிக்கானே சுயம்பு, ரொம்ப பிரிலியண்ட் சார். ஆனால் இப்போ ஒரு மாதிரி ஆயிட்டான். நைட்ல எங்ககூட படுக்காம வராண்டாவுல படுக்கான். பொண்ணுங்ககிட்ட ஒவரா பேசுறான். திடீர் திடீர்னு அழுவறான். கோபப்படறான். துண்டை எடுத்து மாறாப்பு மாதிரி போட்டுக்கிறான்.”

சுயம்பு டாக்டரிடம் எதையோ சொல்லத் துடித்தான். சகாக்களைத் துரத்திவிட்டு, அவரிடம் எல்லா வற்றையும் சொல்லப் போவதுபோல் அவர்கள்மீது போங்கடா பார்வையை வீசினான். டாக்டர் அவனிடம் சில கேள்விகளைக் கேட்க ஆயத்தமானார். இதற்குள் ‘கிளினிக் பாய் உள்ளே வந்து, “சார் எம்.எல்.ஏ. வெளியே இருக்கார். ஏதோ ஜலதோஷம் வந்தது மாதிரி சந்தேகமாம்” எனறான.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/85&oldid=1249224" இலிருந்து மீள்விக்கப்பட்டது