பக்கம்:வாடா மல்லி.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 67


ஆனாலும் ஒரு கட்டில் கேட்கிறதுல தப்புல்ல அண்ணே. வஞ்சகம் இல்லாமல் சோறு போடுறாங்க. எங்கேயும் இல்லாத சுதந்திரம் இங்கே இருக்குது. ஆனாலும்.

“என்னடா... வெளையாடுறியா... நான் யார் தெரியுமா?..”

“நான் யார்னு தெரியுமாடா, பாக்ஸிங்ல சில்வர் மெடலிஸ்ட். சில்வர்னா வெள்ளி. கோல்டுன்னா தங்கம். உனக்கு அர்த்தம் தெரியுமாடா”

தரையில் சப்பாணிபோல உட்கார்ந்திருந்த, முத்து நெஞ்சை நிமிர்த்தி எழுந்தான். தூக்கலான தோள்களை லேசாய்த் தட்டிவிட்டான். அவன் போட்ட சத்தத்தில் அந்த இரண்டாவது மாடி மாணவர்கள் கூடிவிட்டார்கள். சுயம்பு ஜன்னலில் சாய்ந்தபடி, மோவாயை நீட்டி நீட்டி, கண்களைக் குலுக்கிக் குலுக்கி, தோளை ஆட்டி ஆட்டிப்

பேசினான்.

“என்னாங்கடா இது. போட்டி போடறவனைத் தோற்கடிச்சு வீரத்தைக் காட்டணும். டிபாசிட்ட இழக்க வச்சு, ஜூனியர் ஜூனியர்தான்னு நிரூபிக்கணும். இதை விட்டுட்டு, விடுதி விட்டு விடுதி வந்து அடிக்க வாlங்களே,

நீங்க ஆம்பிளைங்களாடா...”

விடுதி விட்டு விடுதி வந்தவர்கள், திகைத்துப் போனார்கள். அங்கே கூடிய ஜூனியர்களும் கொதித்து அவர்களை முற்றுகையிட்டார்கள். ரேக்கிங் என்ற பெயரில் இதுக்கு மேல, இவங்க நாரப்பாட்டுக்கு டான்ஸ் ஆட முடியாது. டான்ஸுக்கு பாட்டுப் பாட முடியாது. இவனுக கரும்புள்ளி செம்புள்ளி குத்துறதுக்கு முகத்தைக் கொடுக்க முடியாது. இவங்க சொன்னமாதிரி அந்த முகத்தோட பஸ் ஸ்டாண்டுக்குப் போக முடியாது. நடு ராத்திரியில இவங்க கதவைத் தட்டி நம்ம தூக்கத்தைக் கெடுக்க விடப்படாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/89&oldid=1249228" இலிருந்து மீள்விக்கப்பட்டது