பக்கம்:வாடா மல்லி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9

வாழ்ந்து கெட்டவர்கள் என்பதுபோல், அவர்கள் ‘கெட்டு வாழ்கிறவர்கள்’ என்ற புதுமொழியாய் சொல்லும் படியாய் இருந்தது அந்த வீடு.

சமையலறை மட்டும் பாடாவதிச் சுவரோடு நிற்க, அதற்கு எதிர்த் திசையில் புதிய கான்கிரீட் சுவர்களாலான வீடு. சுற்றிலும் அடைக்கப்பட்ட பனை ஒலை காம்பவுண்ட் அகற்றப்பட்டுக் கருங்கல் சுவர் கம்பீரமாய் நின்றது. மும்மூன்று அறைகளைக் கொண்ட இரண்டு பத்திக் கட்டிடம். அந்த இரண்டும் நீண்ட வராண்டாவில் அல்லது திண்ணையில் முகங்களைக் காட்டிக் கொண்டிருந்தன.

சுயம்புவை, யாரோ உள்ளே கொண்டுவந்து விட்டு விட்டு, வந்த சுவடு தெரியாமல் போய்விட்டார்கள். அவன் மூன்றடி உயரத்திற்கு மேலுள்ள தார்சாவில் பெஞ்சுமேல் உட்கார்ந்திருப்பவர்களைப் பார்த்தான். ஒருவர் பிறக்கும் போதே முடி முளைக்காத மொட்டை அறுபது வயதிருக்கும். அவரருகே ஒரு கம்பீரமான ‘ப’ வடிவ மீசைக்கார இளைஞன். அவன் பக்கத்தில் மஞ்சள் முகத் தோடு கூடிய ஒருத்தி, வயிறு துருத்த சுவரில் சாய்ந்து மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். எதிர்ப்புற நாற்காலியில் அதே வயது இளைஞன். ஆனாலும் மீசை தெரியாத கருப்பு.

சுயம்பு, முற்றத்தில் நிறுத்தப்பட்ட மோட்டார் பைக்கின் முன்பக்க முகப்பில் ஒரு கராத்தேக்காரனின் உருவப்படத்தை ரசித்துப் பார்த்தான். ஆம்புளன்னா இப்படித்தான் இருக்கணும். இல்லாட்டா அந்த டேவிட் மாதிரி இருக்கணும். அதோ இருக்கானே, கரிமூஞ்சி.

சுயம்பு, கராத்தே உருவத்தைக் கண்ணிலிருந்தும், டேவிட் உருவத்தை மனத்திலிருந்தும் விடுவித்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/91&oldid=630569" இலிருந்து மீள்விக்கப்பட்டது