பக்கம்:வாடா மல்லி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 71


“எங்க அக்காவுக்கு நாலு வயசு கீழ.” “சரிப்பா. குத்து மதிப்பா எவ்வளவு தேறும்.”

“இருபத்தொன்னு முடிஞ்சு இருபத்திரண்டு பிறக்கப் போவுது. நெக்ஸ்ட் மன்ந்த் செவன்த் சிஸ்டர் பெர்த்டே.”

“மாமாவுக்கு நீ கடைசியில சொல்ற எந்த எழவும் புரியல. ஆனாலும் பரவாயில்லை. ஆனால், பேசும்போது உடம்பை இப்படி ஏன் வளைக்கே..”

“நான் வளைக்கலை மாமா. அது தானா வளையுது.”

“என்ன புள்ள அப்படிப் பாக்கே. உன் மருமகனுக்கு மொதல்ல மோர் கொண்டுவா.”

அந்தம்மா, உள்ளே போய்விட்டாள். சுயம்பு தன் பக்கம் உள்ள நாற்காலியில் இருக்கும் ‘கரி மூஞ்சியையும்’ எதிர்பக்கத்து ‘சிடு மூஞ்சியையும் சகிப்புத்தன்மையோடு

பார்த்துக்கொண்டு அதே சமயம் எரிச்சலாய்க் கேட்டான்.

“இவங்களுல எவரு மாப்பிள்ளை.”

ளு ரு

பிள்ளைத்தாய்ச்சி, அப்போதே அவன் மைத்துன னாய் ஆகிவிட்டதாய் நினைத்துக் கிண்டலும் கேலியுமாய்க் கேட்டாள்.

“நீங்களே கண்டுபிடிங்க..”

சுயம்பு, எதிரும் புதிருமாய் உட்கார்ந்திருந்த இரண்டு இளைஞர்களையும் பார்த்தான். எவரும் பிடிக்கவில்லை. ஒருத்தன்கூட ஆம்புளையாய்த் தெரியவில்லை. எக்கா எக்கா இந்தக் கல்யாணம் நடக்காதுக்கா. நடந்தால் கிளி வளர்த்து பூனைகிட்ட கொடுக்கதுக்கு சமானம். ஆலம்பழத்தை அண்டங்காக்கா கொத்திட்டுப் போறது மாதிரி.. பூனையாயிருந்தா கல்லடிப்பேன். காக்காவா இருந்தால் கையை ஓங்குவேன். ரெண்டுல எதையுமே ஒன்கிட்ட அண்டவிடமாட்டேன்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/93&oldid=1249232" இலிருந்து மீள்விக்கப்பட்டது