பக்கம்:வாடா மல்லி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 73


நெடுக்குமாக லாந்தினான். வாசலில் போய் நின்றான். யாரு அது. இந்தப் பக்கமா வாராள். பஸ்ல. சும்மா பக்கத்துல இருந்ததுக்கு பவுசு பண்ணினாளே, அவளா, அவள்தான். அதே ரெட்டைப் பின்னல். அதே அழுமூஞ்சி. அவனைப் பார்த்தபடியே வீட்டுக்குள் நுழையப்போன அந்தப் பெண்ணை, தப்பிக்க முடியாதபடி கையைக் குறுக்காக நீட்டிக்கொண்டு, சுயம்பு ஒரு கேள்வி கேட்கப் போனான். அவள், கோபப்படுவதற்குப் பதிலாக சப்த நாடிகளும் அடங்கி, சகல நாடிகளும் ஒடுங்கி, அவனைப் பயத்தோடு பார்த்தாள்.

“ஓங்களுக்கு இந்த வீடா...” “ஆமா.. இங்கே எப்படி..” “எங்க அக்காவைத்தான், ஒங்க வீட்டு வாத்தியார் மலைச்சாமி பாண்டியனுக்கு முடிவு செய்திருக்கு... ஆனாலும் நான் ஓ.கே. சொன்னாத்தான் கல்யாணம் நடக்கும். ஒங்களுக்கு அவரு என்ன வேணும்?”

“கூடப்பிறந்த அண்ணன்.”

“என்னப் பஸ்ல போட்டு பாடாப்படுத்துனாரே. அவரா. அப்படி என்னமா நான் பெரிய தப்புப் பண்ணிட்டேன்... என்னையே இப்படிப் போட்டு அடிச்சவரு, எங்க அக்காவை எப்படிப் போட்டு அடிப் பாரோ. ஒங்க வாடையே வேண்டாம்மா. நேருக்கு நேரா சொல்லிட்டே போயிடப் போறேன்.”

அவள், கண்களைத் தாழ்த்தினாள். பின்னாலும் முன் னாலும் பார்த்தாள். மெள்ள விசும்பினாள். ரகசியம் பேசுவதுபோல் சொன்னாள்.

“அவரு என் அண்ணன் இல்ல. என்னோட உட்பி”

“அப்படின்னா..”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/95&oldid=1249235" இலிருந்து மீள்விக்கப்பட்டது