பக்கம்:வாடா மல்லி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 சு. சமுத்திரம்


“இப்போ காதலிச்சுட்டு அப்புறமா கட்டிக்கப் போறவரு.”

“அடிப்பாவி கெடுத்தியேடி. ஒங்கழுத்துல, அவன் கை போடு முன்னால உதட்டுல வாய் படலாமா. ஆமா, அந்தப் பாவிப் பய அப்படி ரகளை பண்ணுனானே. நீயும் ‘எண்ணா. எண்ணான்னு வேசம் போட்டியே. பஸ்ல ஓங்க ஊருக்காரங்க யாராவது பார்த்திருந்தால்.”

“பஸ்ல யாரும் இல்லன்னு உறுதி செய்த பிறகுதான் நான் கத்துனேன். அவரும் ஹீரோவானாரு...”

“நல்ல மனுவி நீ. கட்டிக்கப் போறவனை, கூசாம தங்கச்சின்னு சொல்றவன் ஒரு நாளைக்கு உன்னைத் தங்கச்சியா நெனச்சேன்னு சொல்லிடப்போறாண்டி. இனிமேலாவது அந்தக் கழுதைப் பயல களிலின்-சிஸ்டர்னு சொல்லச் சொல்லு. ஸிஸ்டர் என்கிற வார்த்தை ரொம்பப் புனிதமான வார்த்தை... எங்க அம்மாவ எனக்குப் பிடிக்கிறதுக்கே காரணம், அவள் எங்க அக்காவை பெத்தாள் என்கிறதுக்காக்த்தான்.”

“நீங்க சொல்றபடியே கேக்குறேன். ஆமாம்-நீங்க எதுக்காக என் பக்கத்துல வந்து உட்கார்ந்தீங்க..”

“அதுவா. அது ஒரு பெரிய கதை. சொன்னாலும் தீராது. சொல்லியும் மாளாது.”

“தயவுசெய்து என்னைப்பற்றி யார்கிட்டவும் சொல்லப்படாது. அண்ணன்கள் அடிச்சே கொல்வாங்க. அதுக்கு முன்னால நான் தூக்குப் போட்டுச் சாக வேண்டியது வரும். இதுனால ஒங்க அக்கா கலியாணமும் நின்னுடும்.”

“கவலப்படாதே. கவலப்படாதேம்மா. நான் மூச்சு விடமாட்டேன். பொண்ணுக்குப், பொண்ணு இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/96&oldid=1249236" இலிருந்து மீள்விக்கப்பட்டது