பக்கம்:வாடா மல்லி.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடா மல்லி 77


பிடுங்கிக்கொண்டு, எல்லோருக்கும் பாகப்பிரிவினை செய்தாள். சுயம்பு அவற்றைத் தின்றுவிட்டு அவசர அவசர மாய் எழுந்தான். அவன் ஒயிலாக நின்ற தோரணையும், கண்களைச் சிமிட்டிய விதமும், குரலின் இதமும் அந்தக் குடும்பத்தினருக்கு ஒரு மாதிரியாகப் பட்டது. ஆனாலும் அவனைச் சூதுவாதற்ற சுபாவி'யாக எடுத்துக் கொண்டார்கள். தாய்க்காரிதான் இந்திராவுக்கு இவன் பொருத்தமாய் இருக்கமாட்டானோ என்று அப்போது ஆசைப்பட்டதை இப்போது மறு பரிசீலனை செய்தாள்.

சுயம்புவை, எதிர்கால மச்சான்காரனே பேருந்து நிலையம் வரை வந்து வழியனுப்பினான். அவன் பஸ்ஸில் ஏறிய விதம், மாப்பிள்ளைக்காரனுக்கு என்னவோ போலிருந்தது. யோசித்தான்.

10

சுயம்பு பல்கலைக்கழக விடுதிக்கு வந்தபோது இரவாகிவிட்டது. மூர்த்தியும் முத்துவும் அவனைப் பழையபடியும் கண்டுக்காமல் இருந்தார்கள். இவன்தான் விடவில்லை. -

“என்னடா ஒருத்தி எங்கே போயிட்டு வருதுன்னு கேட்கிறீங்களாடா. நீங்க ஆம்புளைங்களாடா...”

“என்னடா உளறுறே.” “எங்க அக்காவுக்கு நிச்சயிச்ச மாப்பிள்ளயப் பார்த்து விட்டு வரேன். எனக்கே அவருமேல ஒரு ஆசை. அது காதலா மாறாமல் இருக்க ரெண்டு காரணம் இருக்கு.”

“மாத்திரை வேகம் முடிஞ்சுட்டுன்னு நினைக்கேன். இன்னிக்கு இவனுக்கு ரெண்டு மாத்திரையா போடணும்.”

7

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாடா_மல்லி.pdf/99&oldid=1249241" இலிருந்து மீள்விக்கப்பட்டது