பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீன்காரி 'என்னென்ன மீனிது? சொல்லி டென்றேன்; - அவள் ஏறிட்டுப் பார்த்தன ள் கூர்விழியாள் ! 'தின்னத்தின் னச்சுவை மீறுமையா! - எங்கும் தேடக் கிடைக்காது கொள்வீர் என்ருள். நொச்சிச் சருகென்றேன் இல்லை! இல்லே - இது நுணலேக் கருவா டெனச்சிரித்தாள் ; 'பச்சைகெத் திலி,காரை பத்தியப் பொடி - இது !. பார்க்கிறீரா?' என்ருள் ; ஊம் ஊம் என்றேன். பாளே விரிந்தது; வாய்திறந்தாள் - முத்துப் பற்கள் விளங்கின நீர்த்துளிபோல் ! காளே இதயப் பெருங்கடலில் - என்றுங் கட்டின்றிப் பாய்வாளே இந்தா என்ருள். 'பிட்டுக் குதவிடும் இந்தச்சுரு - புளிப் பெய்சாறுக் காகிடும் இக்கிழங்கான் ; எட்டென்றும் பத்தென்றும் உண்ணுது - சேர்த்தால் என்றைக் கடைவது இன்பம் ? என்ருள். நாளேக்குப் பின்னைக்கு வேண்டுமென்று - ஒரு நாளும் கினேப்பது இல்லையோ ! கோளர்வாழ் இந்த உலகினிலே - சிறு குருவிபோல் வாழுதல் நன்ருே ? என்றேன் ; புன்னே சிரிப்பெனக் கன்னிசொல்வாள் - இந்தப் பூமியில் இன்பமாய் வாழு தற்கே என்னரும் கிள்ளேயும், சுற்றமும் ஆளனும் எனக்குண்டே வேறென்ன வேண்டும் ? என்ருள். கள்ள மறியா தவளிதய - இன்பக் கலகலப் பான இசைமொழித் தேன் கொள்ளே கொள்ளே, அக்கடைத் தெருவில் - ஏழைக் குதுகல வாழ்க்கை எனக்கிலேயே ! . 5