பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எது இன்பம்? மலேமீது திப்போல மேல்வா னத்தே மறைகின்ற செம்பரிதி இன்பம்! இன்பம்!! பலநிறத்தைப் பாய்ச்சுகின்ற செக்கர் கீழ்வான் படர்ந்துவரும் இளஇருளும் இன்பம்! இன்பம்!! பொலுபொலென வானத்தே சிந்தி வைத்த பொற்றுகளாம் உடுக்கூட்டம், ஒன்றி ரண்டு விலையில்லா ஒளிபெருக்கும் வயிரக் கற்கள் விண்ணிடையே கண்சிமிட்டல் இன்பம்! இன்பம்!! மத்தளம்போல் முழங்குகின்ற ஓடை இன்பம்! வண்ணுனின் துணிவெளுக்கும் ஓசை இன்பம்! கத்தரிக்காய்த் தோட்டத்தே நீர்இ றைக்கும் கனிவுதரு பாட்டின்பம்! வண்டு மொய்க்கும் கொத்தெருக்கின் நீலமலர், ஈச்சன் துரங்கும் குருவிசெய்த புற்கூடு, வாழை ஆடும் தத்தைஇணே, குளிர்நிழல் குளத்தில் மேதி தலைமுழ்கி விளையாடல் இன்பம்! இன்பம்!! பூக்களிலே பறந்துவிளே யாடும் பட்டான், பொதுக்கென்று நீர் பாயும் தவளேக் கூட்டம், நோக்கையிலே தலையிழுக்கும் நீர்வாழ் பாம்பு, நொய்மணலின் மினுமினுப்பு, தென்றற் காற்று, சாக்காட்டிற் கஞ்சாத வீரன் போல்த் தலைநிமிர்த்தி நடந்துவரும் காளை மாடு, வாக்கினிமை காட்டுகின்ற குயிலும் மண்ணில் வற்ருத இன்பமடா இன்ப மாமே! I'