பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏக்கம் புன்னேயின் வேரைத் தாவிப் புரண்டிடும் அலேகள்; காய்த்த தென்னேயில் பெட்டை நாரை தொடுவானத் திசையை நோக்கித் தன்றலே நீட்டும்; சற்றுத் - தடங்கடல் பரந்து பார்க்கும்; சென்றதன் இன்பச் சேவல் வழியினைப் பார்க்கும்; ஏங்கும் ! தாழையின் அருகில் பூத்த கழிநீலம் தன்னைக் காலே வாழவைத் தகன்ற வண்டின் கொடுமையை எண்ணும் ; ஏங்கும்! ஏழ்மையின் விளக்கம் சிற்றுார் எழில்மிகு சிறுவர் கூட்டம் சூழ்ந்தலை வண்டற் பாவை துடைத்திடத் துடிக்கும்; ஏங்கும் ! அலேயிலா கடுக்க டல்மேல் ஆளனின் உருவை ஒடிச் சிலைவிழி தேடும் ; ஏதோ செப்பிடும் இதழ்கள், கஞ்சிக் கலத்தினே இறக்கும் கைகள் ; கால்விரல் மண்ணக் கிண்டும் ; அலேயலே யாகத் துன்பம் அரித்திட மனேவி ஏங்கும்!