பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரவன் வருகை மயல்தரு கீழை நாளின் வானத்தைக் காண எண்ணி வயற்புறம் சென்றேன் ; கொச்சி மணம்வீசும் வேலி யோரம் குயில்துணுக் கிளைகள் தாவிக் 'குக்குகுக் கென்றே பாடும் ; செயலற்று கின்றேன் வீசும் சிலுசிலு காற்றில் நானே ! சேக்கையை விட்டு மக்கள் எழுந்திடச் சேவல் கூவும்: காக்கைகள் ஒன்றி ரண்டு கரைந்திடும் தென்னந் தோப்பில் ; வாக்கினேத் திருத்திக் கொள்ளும் வாழைமேல் கிள்ளே தாவிப் ; போக்கிடும் இருளேக் காலச் செந்நிறம் கீழ்வான் பூசி ! விரிமலர் தேடி யென்றன் மேலுராய்ந் தோடும் வண்டு ; கருநிற மேகம் தூக்கம் கலைந்தெழு சோம்பன் போலப் புரண்டெழும் கீழ்வா னத்தே ; புதுப்புது அழகைக் காட்டும் எரிக்கிரை யாகு தந்தோ ! தொடுவானம் தீதி எங்கும் !