பக்கம்:வாணிதாசன் கவிதைகள்-1.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 பார்ப்பனச் சேரி கோயில் பக்கலில் உண்டு ; ஈசன் தேர்வர நான்கு மாடத் தெருவுண்டு; வலையை விசி ஈர்த்திடுங் கோவில் பூனே விலைமாதர் இருப்பு ; சொந்த 4. ஊரினைப் பிரிந்தோர் தங்கச் . . . சாவடி எங்கும் உண்டே ! எழுத்தறி சாலை, மக்கள் இன்னிசை பயிலும் சாலே, வழுவழுப் பான மொட்டை மெய்ஞ்ஞான அடிகள் மாசு கழுவிட முனையுங் கல்வி மடம்,தொழிற் சாலே பின்னும் 5。 பழுதற உண்டு ; எந்தப் பகட்டுமே இல்லை யங்கே ! தண்டமிழ் ஊட்டுங் கல்விக் கதிரவன் கழகம், சங்கு கொண்டமால் இருப்பு, நல்ல குடிபுனல் கூவம், ஏரி, மண்டபம் மூலேக் கொன்று ; வழியெலாம் விளக்குத் தூண்கள் : 6. அண்டையில் புதுவை ! எங்கள் - மிகுதேவைக்(கு) அட்டி யுண்டோ?